பாஜகவில் இருந்து விலகிய கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவில் இருந்து சீட் கொடுக்கப்படாததால் ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் தொடங்கி 4 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் அரசியல் கட்சிகள் இன்னும் முழுமையாக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

ஆளும் கட்சியான பாஜகவே 212 தொகுதிகளுக்குதான் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. கட்சியில் பல முக்கிய தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்ததால், கர்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சமண் சவதி போன்றோருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதனால், மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. லட்சுமனணம் சவதி, பாஜகவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெகதீஷ் ஷெட்டரும் தனக்கு போட்டியிட கண்டிப்பாக வாய்ப்பு வேண்டும் என்று கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

Congress Top leaders meet Ex BJP MLA in Bangalore,Will decide by today evening says jagadish Shettar

தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுக்காது என்பது உறுதியானதால், பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக, ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டருக்கு உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட வாப்பு அளிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்ற ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். ஜெகதீஷ் ஷெட்டர் எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை..நாங்களும் அவருக்கு எதையும் கொடுப்பதாக கூறவில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+