கனடா டூ கர்நாடகா.. பாஜகவுக்கு வாக்களிக்க விமானத்தில் வந்த NRI - ஒரே போடாக கலாய்த்துவிட்ட காங்கிரஸ்
பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து இருக்கும் நிலையில், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தனது மகன் கனடாவில் இருந்து கர்நாடகாவுக்கு வருவதாக பெண் ஒருவர் பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் பிரமுகர் ஒரே வரியில் அவரை கலாய்த்து இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ஆதர்ஷ் ஹெக்டே. பாஜக ஆதரவாளரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு மூதாட்டியை சந்திக்கும் பாஜகவினர் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றனர். உடனே அந்த பெண், "நிச்சயம் வாக்களிப்பேன். எனது மகன் கனடாவில் இருக்கிறார். அவர் மோடியின் ஆதரவாளர்கள்.

தேர்தலில் வாக்களிப்பதற்காகவே கனடாவில் இருந்து கர்நாடகாவிற்கு வருகை தருகிறார். வாக்களித்துவிட்டு திங்கள் கிழமை மீண்டும் கனடாவுக்கு திரும்பி செல்கிறார்." என்று தெரிவித்தார். உடனே இதனை கேட்டு ஆச்சரியமடைந்த பாஜகவினர், "நாங்கள் அவரை பார்க்க வேண்டும். உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறுவோம்." என்று கூறுகின்றனர்.
இந்த வீடியோ ட்விட்டரில் பகிர்ந்த ஆதர்ஷ் ஹெக்டே, "இவரது மகன் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே கனடாவில் இருந்து வருகிறார்." என்று பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் ட்விட்டரில் பார்வையிட்டு உள்ளார்கள். தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த காலத்தில் இந்த வீடியோவை ஆதர்ஷ் பதிவிட்டு உள்ளார்.
தொடர்ந்து அதிகளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை கர்நாடகா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் லாவன்யா பல்லால் ஜெயின் ரீட்வீட் செய்து விமர்சித்து இருக்கிறார். அதில், "அவர் இந்தியாவிலேயே தங்கி இருந்து பிரதமர் மோடியின் ஆட்சியை ரசிக்கட்டும். எதற்கு கனடாவுக்கு ஓடுகிறார்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் லாவன்யாவின் இந்த ரீட்வீட்டையும் பல்வேறு தரப்பினர் பகிர்ந்தும், கருத்து தெரிவித்தும் விமர்சித்து வருகிறார்கள். கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியின் காலம் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

He should stay back in India to enjoy Modi avra PMship , why run away to Canada? https://t.co/Gk3631Lb1a
— Lavanya Ballal Jain (@LavanyaBallal) May 10, 2023












Click it and Unblock the Notifications