Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ஃபுல் மெஜாரிட்டி’ கர்நாடகா காங்கிரசுக்கு தானாம்! பரிதாபத்தில் பாஜக! ஜேடிஎஸ்க்கும் செமஅடி-பரபர சர்வே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை கைப்பற்ற இந்த 3 கட்சிகளும் போட்டா போட்டி போட்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டி பெறும் எனவும், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடும் சரிவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதேவேளையில் 2018 ல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனி மெஜாரிட்டிக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதனால் மேஜிக் நம்பரான 113 தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாறாக தொங்குசட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக மாறவும் ஜேடிஎஸ் கட்சி தயாராக உள்ளது.

Congress will gets full majority BJP and JDS may face big losses in Karanataka Election, says Eedina survey

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கும், சில பாஜகவுக்கும் ஆதரவாக உள்ளன. அதேவேளையில் பல கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை உருவாகலாம் என கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது கன்னடா இணையதளமான Eedina கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 40 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒரு தொகுதிக்கு 16 பூத்களை சேர்ந்த மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்து கணிப்பில் 55 சதவீத ஆண்கள், 45 சதவீத பெண்கள் பங்கேற்றனர். இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த கருத்து கணிப்பு என்பது Yes அல்லது No என்ற பதிலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிக்கு இடையே பெரும் அதிரச்சியை கொடுத்துள்ளன. மாறாக காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பின் முடிவின்படி ஹைதராபாத் -கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 31 முதல் 37 தொகுதிகளை கைப்பற்றும். பாஜக, ஜேடிஎஸ் கட்சிக்கு தலா 2 முதல் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை-கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 50 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 40 முதல் 46 தொகுதிகளை கைபபற்றும் எனவும், பாஜக 3 முதல் 7 இடங்களிலும், ஜேடிஎஸ் பூஜ்ஜியம் முதல் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடலோர கர்நாடகா மாவட்டங்களில் 19 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 10 முதல் 14 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 9 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய கர்நாடகா மாவட்டங்களில் 26 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 19 முதல் 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 முதல் 7 தொகுதகிளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மண்டலங்களிலும் ஜேடிஎஸ்க்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர தெற்கு கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 61 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 26 முதல் 32 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக 10 முதல் 14 இடங்களிலும் ஜேடிஎஸ் கட்சி 15 முதல் 19 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூர் நகரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 முதல் 20 தொகுதிகளிலும் பாஜக 6 முதல் 10 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் கட்சி 1 முதல் 3 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும். அதாவது தனிமெஜாரிட்டிக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 132 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக பாஜக 57 முதல் 65 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அக்கட்சி பெரியளவில் பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஜேடிஎஸ் கட்சி கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை 19 முதல் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என Eedina கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கருத்து கணிப்பின்படி கடந்த 2018 தேர்தலில் 38.1 சதவீத ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை 43 சதவீதம் வரை வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.மாறாக கடந்த முறை 36.3 சதவீத ஓட்டுக்களை பெற்ற பாஜக இந்த 33 சதவீத ஓட்டுக்களாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் கட்சி 18.3 சதவீத ஓட்டுகளை முந்தைய தேர்தலில் அறுவடை செய்த நிலையி்ல் இந்த முறை 16 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+