அடிவாங்கும் அமித்ஷாவின்“ஆபரேசன் சவுத்?” காங்கிரஸ் கையில் கர்நாடகா! பாஜகவை அதிரவைத்த கருத்துக்கணிப்பு
கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில ஓன்றரை மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு: விரைவில் கர்நாடக மாநிலத்தில் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் வெற்றிபெற்ற பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. எனவே கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் ஒன்றரை மாதங்களில் நடைபெற இருக்கிறது.
தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளிய உள்ளது. பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது.

தொடரும் பிரச்சனைகள்
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகளும் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்ட தொடங்கி இருக்கின்றன. எடியூரப்பாவின் விலகலை தொடர்ந்து கர்நாடகாவில் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு அம்மாநிலம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது.

மதவாத மோதல்கள்
ஹிஜாப், ஹலால் சர்ச்சைகள், அதனால் ஏற்பட்ட மத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், லிங்காயத்து சமுதாய மக்களின் எதிர்ப்பு, பாஜக உட்கட்சி பூசல், வேலையிழப்புகள், பெங்களூரு வெள்ளம் போன்றவற்றால் அந்த கட்சிக்கு இந்த தேர்தல் கடினமானதாக இருக்கும் என்றே கூறப்பட்டு வந்தது.

களமிறங்கிய பாஜக
இதன் காரணமாக முன்கூடியே பாஜக அங்கு பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனைகள், கர்நாடக மாநில பாஜக அரசின் பணிகளை எடுத்துரைப்பதற்காக கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து தொகுதி வாரியாக பொதுகூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.

காங்கிரஸ், மஜத
காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை முடிந்த தெம்புடன் கர்நாடகவை சேர்ந்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், கர்நாடகாவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளமும் இம்முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

லோக் போல் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் லோக் போல் என்ற தனியார் அமைப்பு தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கிறது. 45 ஆயிரம் மக்களிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்பதை காட்டுகிறது.

யாருக்கு வெற்றி
இதில் காங்கிரஸ் கட்சி 116 முதல் 122 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், பாஜக 77 - 83 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 21 - 27 இடங்களிலும், இதர 1 - 4 தொகுதிகளிலும் வெல்லும் என்று முடிவுகள் வெளியாகி உள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட காங்கிரஸ் அதிக இடங்கள் வெல்லும் என்று குறிப்பிடும் இந்த கருத்துக்கணிப்புகளை போல் முடிவுகள் வந்தால் காங்கிரஸ் இங்கு தனித்து ஆட்சியமைப்பதுடன், தென் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரு மாநிலத்தையும் பாஜக இழக்கும்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications