கிராமங்களில் கலக்கிய காங்கிரஸ்.. பாஜகவை காப்பாற்றிய நகரங்கள்! கர்நாடகா தேர்தல் சொல்லும் பாடம்
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அதில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்று இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் கிராம புறங்கள், நகர்புறங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு ஆதரவு கிடைத்து உள்ளது என்பதை பார்ப்போம்.
கர்நாடகா மாநிலத்தில் கிராம புறங்கள், நகர்புறங்கள், மாநகரங்களில் எந்தெந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்போம். அந்த வகையில் கர்நாடக தொகுதிகளை நகர்புறங்கள், சிறு நகரங்கள், கிராமபுறங்கள் என பிரித்து இருக்கிறோம்.

அந்த வகையில், கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை விட நகர்புறங்களில் பாஜகவே அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளது. கர்நாடகாவில் 47 நகர்புற தொகுதிகள் இருக்கின்றன. இதில் பாரதிய ஜனதா கட்சி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் வெற்றிபெற்று இருக்கின்றன. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஒரு நகர்புற தொகுதியில்கூட இல்லை.
சிறுநகரங்களை எடுத்துக்கொண்டால் கர்நாடகா மாநிலத்தில் 26 தொகுதிகள் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றிபெற்று இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் வென்று உள்ளன. பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி சிறு நகரங்களில் 1 தொகுதியை வென்று இருக்கிறது.
கர்நாடகாவில் கிராமபுற தொகுதிகளே அதிகம் இருக்கின்றன. அம்மாநிலத்தில் 151 தொகுதிகள் கிராமபுறங்களிலேயே அமைந்து உள்ளன. காங்கிரஸ் கிராமபுற தொகுதிகளைதான் மொத்தமாக தட்டித்தூக்கி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 34 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது.
குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா வென்ற 19 தொகுதிகளில் 17 தொகுதிகள் கிராமபுறங்களில்தான். சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று உள்ளது. இதில் பாஜக நகர்புறங்களில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதற்கு காரணம் பெங்களூருதான்.

காரணம் தலைநகர் பெங்களூருவில் உள்ள 28 இடங்களில் 16 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று உள்ளது. 12 இடங்களில் காங்கிரஸ் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களிலும் வெற்றிபெற்று இருக்கின்றன.
குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியில் வெற்றிபெற்று உள்ளனர்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications