கொரோனா கோரப்பிடியில் கர்நாடகா.. ஒரே வாரத்தில் 2 எம்பிக்கள் பலி.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு
பெங்களூர்: கொரோனா பாதிப்பால் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண ராவ் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 65.
கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பி நாராயண் ராவ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மோசமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மனிஷ் ராய் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மோசமான உடல்நிலை
அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாகிவிட்டது, அவரது பல உறுப்புகள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. அவர் வென்டிலேட்டர்கள் மற்றும் டயாலிசிஸ் உள்ளிட்ட பல கருவிகள் உதவியுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

உயிரிழப்பு
டாக்டர்களின் 24 மணி கண்காணிப்பில்தான் அவர் இருந்தார். ஆனாலும் கொரோனா பாதிப்பிலிருந்தும் அதன் பக்க விளைவுகளில் இருந்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று மதியம் நாராயண ராவ் உயிரிழந்தார். இவ்வாறு மனிஷ் ராய் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர்
கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் எம். கார்ஜோல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்பிக்கள் பலி
மேலும், கடந்த 1 வாரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 எம்பிக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்த சுரேஷ் அங்கடி மற்றும் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த, அசோக் கஸ்தி ஆகியோர் அடங்கும்.

விவிஐபிகள்
சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, நாடு முழுக்க வி.வி.ஐ.பிகளும் கொரோனாவுக்கு தப்ப முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர், நான்கு எம்.பி.க்கள் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.க்கள் இதுவரை கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications