சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை- சிறை நிர்வாகம் தகவல்
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசிக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Recommended Video

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் சில நாட்களில் இவர்களின் தண்டனை முடிந்து விடுதலையாக உள்ள நிலையில், நேற்று முன்தினம் திடீரென சசிகலாவுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மேற்கொண்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சசிகலா உடல்நலம் குறித்து அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. இதனால் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தகவல் தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications