அந்த ஆராய்ச்சி ரிசல்ட்.. பெங்களூரில் நடுக்கத்தில் மக்கள்.. வௌவால்களால் ஏற்பட்ட "கொரோனா" பீதி!
பெங்களூரில் வௌவால்களால் மக்கள் கடுமையான கொரோனா அச்சத்தில் இருக்கிறார்கள்.
பெங்களூர்: பெங்களூரில் வௌவால்களால் மக்கள் கடுமையான கொரோனா அச்சத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக நிறைய புகார்கள் பெங்களூர் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது.
Recommended Video
கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முக்கியமான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆராய்ச்சி கட்டுரையில் இந்தியாவில் இருக்கும் வௌவால்களிடம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் கேரளா, இமாச்சல பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சில வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட வௌவால்களில் தமிழகத்தில் கொரோனா இருந்துள்ளது.

என்ன ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சி இந்தியா முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆராய்ச்சி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்தது. அதில் பொதுவாக வௌவால்கள் உடலில் நிஃபா வைரஸ், கொரோனா வைரஸ் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இது இயல்பான விஷயம்தான். இந்தியாவில் வௌவால்களில் காணப்படும் கொரோனா வைரசுக்கு பேட் கோவிட் (bat coronavirus -BtCoV) என்று பெயர். இது மனிதர்களுக்கு பரவாது.

கொரோனா தொடர்பு இல்லை
அதேபோல் தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கும், வௌவாலில் உள்ள இந்த கொரோனா வைரசுக்கும் எதுவும் தொடர்பு இல்லை. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வௌவால்களில் நிஃபா வைரஸ் இருப்பதும் சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா உட்பட உலகம் முழுக்க பரவும் கொரோனா எப்படி உருவானது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கி இருந்தது.

பெங்களூர் கொரோனா
இந்தநிலையில் தற்போது பெங்களூரில் வௌவால்களால் மக்கள் கடுமையான கொரோனா அச்சத்தில் இருக்கிறார்கள். பெங்களூரில் சமீப நாட்களாக வௌவால்கள் எண்ணிக்கை அதிகம் ஆகியுள்ளது. இரவு நேரத்தில் வௌவால்கள் அதிகமாக உலவ தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் அங்கு வௌவால்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

மக்கள் அச்சம்
இது தொடர்பாக நிறைய புகார்கள் பெங்களூர் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது. அதன்படி எங்கள் வீட்டிற்கு அருகே வௌவால்கள் இருக்கிறது. மரங்களில் நிறைய வௌவால்கள் உள்ளது. இதனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. அதிகாரிகளை அனுப்பி உடனே இந்த வௌவால்களை பிடியுங்கள் என்று தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

அதிகாரிகள் விளக்கம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சிக்கு பின் இப்படி பலரும் போன் செய்வதாக பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.இதுகுறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், வௌவால் மூலம் கொரோனா இந்தியாவில் பரவவில்லை. மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். உங்கள் வீட்டிற்கு அருகே வௌவால் சுற்றினால் மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications