எல்லை மீறி போறீங்க.. தண்டவாளத்தில் நின்று புதுமண ஜோடி செய்த காரியம்.. நூழிலையில் 5 பேர் எஸ்கேப்
பெங்களூர்: ப்ரீ வெட்டிங் சூட் என்ற பெயரில் தற்போதைய புதுமண ஜோடிகள் செய்யும் செயல்கள் பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கும் விதமாகவும், சில நேரங்களில் தங்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துவிடுகிறது. அப்படித்தான் பெங்களூரில் புதுமண ஜோடிகள் ரயில் தண்டவாளத்தில் நின்று ப்ரீ வெட்டிங் சூட் நடத்திய புதுமண ஜோடி உள்பட 5 பேர் நூழிலையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண வீடுகளில் மணப்பொண்ணும், மாப்பிள்ளையும் தாலி கட்டும் நேரத்தில்தான் நேருக்கு நேர் பார்த்தோம் என்று சொல்லும் காலம் எல்லாம் 90 களிலேயே மலையேறிவிட்டது. அதன்பிறகு தொழில் நுட்பம் வளர வளர திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலமும் கூட எவ்வளவோ முன்னேறிவிட்டது.

ப்ரீ வெட்டிங் சூட்
அமெரிக்காவில் இருந்து கொண்டு ஆண்டிப்பட்டியில் உள்ள பெண்ணை வீடியோ காலில் பார்த்துக்கொண்டே நிச்சயதார்த்தம் நடைபெறும் அளவுக்கு தற்போது டெக்னாலஜி முன்னேறிவிட்டது. அதுமட்டும் இன்றி திருமணத்திற்கு முன்பே ப்ரீ வெட்டிங் சூட் எனப்படும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு தற்போது அதிகரித்துள்ளது.
அதிலும் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு சில புதுமண ஜோடிகள் செய்யும் செயல்கள் வரம்பு மீறி செல்வதோடு.. அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தாக முடிகிறது. மலையில் ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு சூட் நடத்துவது, சாலைகளில் நின்று போட்டோ எடுத்துக்கொள்வது என அவ்வப்போது பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கும் விதமாகவும் தங்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் போட்டோ ஷூட் நடத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
நூழிலையில் உயிர்தப்பினர்
அவ்வப்போது இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவதோடு பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறது. சாலைகள், ஆபத்தான நதிகள் என போட்டோ சூட் நடத்திய கதையெல்லாம் போய் தண்டவாளத்தில் போட்டோ சூட் நடத்தி நூழிலையில் புதுமண ஜோடி மற்றும் போட்டோ கிராபர் உள்பட 5 பேர் எஸ்கேப் ஆகியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே மதுகரிபுரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த புதுமண ஜோடிகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முன்பாக பிரீ வெட்டிங் சூட் எடுக்கலாம் என திட்டமிட்ட அந்த ஜோடி, வெளியூர் சென்றால் அதிக செலவு பிடிக்கும். உள்ளூரிலேயே எதாவது ஒரு நல்ல ஸ்பாட்டாக இருந்தால் போட்டோ எடுக்கலாம் என நினைத்து இருக்கிறார்கள்.
ரயில் தண்டவாளத்தில் போட்டோ ஷூட்
அப்போதுதான் அவர்களுக்கு அவர்கள் ஊர் வழியாக செல்லும் தண்டவாளம் நினைவுக்கு வந்து இருக்கிறது. இந்த தண்டவாளம் வழியாக போட்டோ சூட் நடத்தினால் வித்தியாசமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு இருவரும் அங்கு போட்டோ சூட் நடத்த சென்றுள்ளனர். புதுமண ஜோடி மற்றும் 3 புகைப்பட கலைஞர்கள் என 5 பேர் சேர்ந்து 'ப்ரீ வெட்டிங் போட்டோசூட்' எனப்படும் திருமணத்துக்கு முந்தைய போட்டோசூட் நடத்தியுள்ளனர்.
விதவிதமான போஸ்களில் அவர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்ததுள்ளது. போட்டோ சூட்டில் பிசியாக இருந்த அந்த ஜோடி, ரயில் வருவதை கவனிக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் 5 பேர் போட்டோசூட் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
எச்சரித்து அனுப்பிய போலீஸ்காரர்
உடனடியாக சத்தம் எழுப்பியதோடு ஓடிச்சென்று 5 பேரையும் ஒதுங்கி நிற்குமாறு எச்சரித்தார். அப்போதுதான் ரயில் வருவதை அவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சுதாரித்துக்கொண்டு தண்டவாளத்தை விட்டு ஒதுங்கி நின்றனர். இதனால் மணமக்கள் உள்பட 5 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
இதையடுத்து ரயில்வே போலீஸ்காரர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். போட்டோசூட் என்ற பெயரில் இன்றைய தலைமுறையினர் எல்லை மீறி செல்லும் செயல்கள்தான் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications