ஜெயலலிதா சொத்துகள் ஏலத்துக்கு ரெடி.. ஜெ.தீபா மனு டிஸ்மிஸ்.. தற்போதைய மதிப்பை கணக்கிட கோர்ட் உத்தரவு!
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள, ஏலம் விட வேண்டிய சொத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியலை அளிக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள், முத்து, பவளம், புடவை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, "வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்களை 31ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மனு தாக்கல் செய்திருந்தார். ஜெ.தீபாவின் மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும், ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட 6 பினாமி நிறுவனங்களில் உள்ள 65 அசையும், அசையா சொத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய 35 நாட்கள் கால அவகாசம் வழங்கி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications