சிஎஸ்கே vs ஆர்சிபி.. குறுக்கிட்ட மழை.. ஆடிப்போன நெட்டிசன்கள்..கூகுளில் டிரெண்டான "பெங்களூர் வானிலை"
பெங்களூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூர் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயம் 'பெங்களூர் வானிலை' மாறி இருக்கிறது.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் அனைத்து ஓரிரு லீக் போட்டிகளும் நிறைவடைகிறது. ஏற்கனவே, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.

இதற்கிடையே நான்காவதாக எந்த அணி தகுதி பெறும் என்பதில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே போட்டி இருக்கிறது. இரு அணிகளும் இன்று தங்கள் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன.
இதில் வென்றால் சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்குச் சென்றுவிடும். அதேநேரம் ஆர்சிபி நெட் ரன் ரேட் காரணமாகச் சென்னையை 18 அல்லது அதற்கு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூர் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம் என கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் குறிப்பாகப் பெங்களூர் ரசிகர்கள் சோகமடைந்தனர். அதிலும் குறிப்பாகப் போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மழை பெய்ததால் ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இதனால் நெட்டிசன்கள் இன்று முழுக்க பெங்களூர் வானிலை குறித்தே அதிகம் தேடியுள்ளனர்
கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயம் 'பெங்களூர் வானிலை' இருக்கிறது. இது தொடர்பான விவகாரங்கள் கூகுள் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பெங்களூரில் அடுத்த சில மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் அது பகிர்ந்துள்ளது. இன்று மே 18ஆம் தேதி மழை பெய்ய 80 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாகக் கூகுள் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிஎஸ்கே, பெங்களூர் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியான போது நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். நெட்டிசன் ஒருவர் இன்று என்ன நடக்கும் என்பது வருணபகவான் கையில் இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் நிச்சயம் வானிலை குறித்தே மக்கள் அதிகம் தேடியிருப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று மே 18 அன்று பெங்களூரில் மழை பெய்ய 61 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதேபோல போட்டி தொடங்கும் முன்பே கொஞ்ச நேரம் மழை பெய்தது. போட்டி தொடங்கும் நேரத்தில் மழை விட்ட நிலையில், மீண்டும் சில ஓவர்கள் முடிந்ததும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications