பெங்களூரில் தொடங்கிய மழை.. சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி நடக்குமா? இரண்டே வரியில் வெதர்மேன் நறுக்
பெங்களூர்: சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி நடக்கும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், மேட்ச் திட்டமிட்டபடி நடக்குமா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அசத்தலாகத் தொடங்கி நடந்து வருகிறது. இப்போது ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது.

ஏற்கனவே, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், நான்காவதாக எந்த அணி தகுதி பெறும் என்பதில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே போட்டி இருக்கிறது.
சிஎஸ்கே vs ஆர்சிபி: இதற்கிடையே இந்த இரு அணிகளும் தங்கள் கடைசி லீக் போட்டியில் இன்று மோதுகின்றன. இதில் வென்றால் சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்குச் சென்றுவிடும். அதேநேரம் ஆர்சிபி நெட் ரன் ரேட் காரணமாகச் சென்னையை 18 அல்லது அதற்கு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பதால் இன்று போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மழை மேகங்கள்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்கனவே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இதற்கிடையே போட்டி தொடங்க இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் திடீரென மழை தொடங்கியுள்ளது. இதனால் மைதானம் முழுவதும் கவர்களை கொண்ட மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மழை எத்தனை காலம் தொடரும்.. மழையால் போட்டிக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் கண்காணிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி, பெங்களூரைச் சுற்றி மழை மேகங்கள் உள்ளன, ஆனால் பெங்களூர் தெளிவாக உள்ளது. முக்கியமாகக் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பெங்களூர் பகுதிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
நறுக் விளக்கம்: மழையால் போட்டி பாதிக்கப்படுமா என்பது குறித்து எளிமையாக விளக்குங்கள் என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குத் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "மேட்ச் நடக்கும்.. மழையும் வரும்.. ஆனால், போட்டி நடந்து முடிவதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல சற்று நேரத்திற்கு முன்பு அவர் மற்றொரு ட்வீட்டில், "பெங்களூரில் ஸ்டேடியத்தின் மேல் லேசான மழைத் தூறல் தொடங்கியுள்ளது. இன்று மழை இருக்கும், ஆனால் மைதானத்தின் வடிகால் நன்றாக உள்ளது என்பதால் இன்று நடக்கும் போட்டிக்கு நிச்சயம் முடிவு கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார், அதாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் கூட அது நடந்து முடியும் என்பதே தமிழ்நாடு வெதர்மேனின் கருத்தாக இருக்கிறது.
ரசிகர்கள்: ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற இந்த போட்டியில் வெல்வது கட்டாயம் என்பதால் இரு அணி வீரர்களும் கடுமையாகப் பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், போட்டி மழையால் பாதிக்கப்படக்கூடாது என்பதது மட்டுமே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.
-
சின்ன தல ரெய்னா பாடிய சூர்யா பாட்டு.. வாழ்க்கையில் யாரும் இப்படி கேட்டிருக்க முடியாது.. சேப்பாக்கமே அதிர்ந்து போச்சு -
ருதுராஜ் பந்தை இப்படி விளாசிட்டாரே.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டுட்டு வாங்க ஹசி.. தோனி கொடுத்த ரியாக்சன்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications