பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பைக் தொட்டது தப்பா.. அதுக்கு ஏன்டா ஜாதிய இழுக்கறீங்க.. தலித் இளைஞரை தாக்கிய கொடூரர்கள்.. பெங்களூரில்

பட்டியலின இளைஞரை ஊரே சேர்ந்து தாக்கிய கொடூரம் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூர்: "பைக்கை ஏன் தொட்டே" என்று கேட்டு, சாதி பெயரை சொல்லி சொல்லி பட்டியலின இளைஞரை ஒரு ஊரே அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சாதிய ரீதியிலான அடக்கு, ஒடுக்குமுறைகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதற்கு எதிராக எவ்வளவுதான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து இந்த சமூகம் சாதிய சிக்கலில் சிக்கி கொண்டுள்ளது... இது ஒருகட்டத்தில் எல்லை மீறியும் போய் கொண்டிருக்கிறது. அப்படித்தான் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Dalit man stripped, assaulted in karnataka for touching bike

இங்கு விஜயபுரா என்ற மாவட்டம் உள்ளது.. இது பெங்களூருவில் இருந்து 530 கிமீ தொலைவில் இருக்கிறது.. இந்த மாவட்டத்தில் மினாஜி என்ற கிராமம் உள்ளது... இங்கு வசித்து வரும் ஒரு இளைஞருக்கு வயது 28 ஆகிறது.. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் ஒரு பைக்கை தொட்டு விட்டாராம்... அந்த பைக் மாற்று சமூகத்தை சேர்ந்தவருடையதாம்.. அந்த பைக்கை ஏன் தொட்டாய் என்று கேட்டு இவரை ஒரு கும்பலே சேர்ந்து தாக்கி உள்ளது... கையில் கிடைத்த கம்புகளை எடுத்து வந்து அந்த சாதிக்காரர்கள் கொடூரமாக அடித்தனர்.. செருப்பை கழட்டியும் அந்த இளைஞரை தாக்கினர்.. இதை யாரோ அங்கிருந்தோர் வீடியோ எடுத்து பதிவிடவும், சோஷியல் மீடியாவில் இதை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்புதமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு

இது சம்பந்தமாக இளைஞரின் தந்தை போலீசிலும் புகார் தந்துள்ளார்.. "சென்னம்மா பகுதியில் ஒரு பைக்கை நிறுத்தியிருந்தனர்.. அதனை என் மகன் தொட்டுவிட்டதாக சொல்லி மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என் மகனை அடித்துவிட்டனர்.. தடுக்க போன என்னையும் என் மனைவி, மகளையும் தாக்கினர்... சாதியின் பெயரை சொல்லி சொல்லி அடித்தனர்.. அசிங்கமாக திட்டினர்... எங்க வீட்டையே கொளுத்திடுவோம்னு மிரட்டினர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இளைஞரை தாக்கிய 13 பேரை தேடி வருகிறார்கள்.. பட்டியலின இளைஞரை ஒரு கிராமமே சேர்ந்து அடித்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Dalit man stripped, assaulted in karnataka for touching bike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X