மும்பை, பெங்களூர் ஓய்வு எடுக்கட்டும்.. இந்தியாவின் சிறந்த நகரம் இதுதானாம்.. அடடே பயங்கர சர்ப்ரைஸ்
பெங்களூர்: இந்தியாவில் பல்வேறு நகரங்கள் இருக்கும் நிலையில், அதில் எந்த நகரம் சிறந்தது என்ற விவாதம் எப்போதுமே முடியாது. இது தொடர்பாக எப்போதும் நீண்ட நெடிய விவாதம் நடந்தே வருகிறது. இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் சிறந்த நகரம் எது என்பது குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டில் சிறந்த நகரம் எது என்ற விவாதம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இடையே தான் இதில் பிரதானமாகப் போட்டி இருக்கும். ஒவ்வொரு நகரமும் பல்வேறு விஷயங்களிலும் சிறந்து விளங்குவதால் எந்த நகரம் சிறந்தது என்பதில் விவாதம் இருந்தே கொண்டே இருக்கும்.

டெல்லி இளைஞர்
இதற்கிடையே டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நாட்டில் எந்த நகரம் சிறந்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார். டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரை விட ஹைதராபாத் சிறந்த நகரம் என அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் போட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், இது பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
கெவின் சாம் என்ற அந்த நபர், இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார். கெவின் ஹைதராபாத்திற்கு வந்த சில மணி நேரத்திலேயே அந்த ஊர் தனக்குப் பிடித்துப் போனதாக அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். தான் கூறும் கருத்து நிச்சயம் பலருக்குப் பிடிக்காமல் போகலாம் என்றும் இது பெரிய சர்ச்சையாகக் கூட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியே கெவின் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். நான் சிறந்த நகரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்ற தலைப்பில் அவர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
எது சிறந்த நகரம்
அதில் அவர், "நான் இப்போது செல்வதைக் கேட்டு பலர் கோபப்படுவார்கள், பலர் திட்டுவார்கள். ஆனால் உண்மையில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் எது சிறந்த நகரம் தெரியுமா? மூன்றும் இல்லை. ஹைதராபாத் தான் சிறந்த நகரம். இது மிகவும் குறைத்து அண்டர் ரேட்டட் நகரம்" என்று அவர் கூறுகிறார். ஹைதராபாத்திற்கு வந்து சில மணி நேரமே ஆனாலும் இந்த நகரம் தன்னை கவர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக அவர் மேலும், "நான் இங்கு வந்து நான்கு மணி நேரங்கள்தான் ஆகிறது, அதற்குள்ளேயே நான் இந்த நகரத்தின் மீது காதல் கொண்டு விட்டேன். நான் டெல்லியைச் சேர்ந்தவன்.. மும்பை, பெஙக்ளூரிலும் வசித்துள்ளேன். சந்தேகமே இல்லாமல் சொல்வேன் ஹைதராபாத் தான் சிறந்த நகரம்" என்று அவர் கூறுகிறார்.

பாராட்டு
மேலும், அவர் ஹைதராபாத்தின் பல முக்கிய அம்சங்களைப் பாராட்டித் தள்ளியுள்ளார். அவர் மேலும், "பாருங்கள், இங்குக் கடுமையான போக்குவரத்து இல்லை. சாலைகள் பெங்களூரை விட சிறப்பாக உள்ளன. ஹைதராபாத் சுத்தமாக இருக்கிறது, மும்பையை விட இது சிறந்தது. மிக முக்கியமாக, இங்கு நான் தைரியமாகச் சுவாசிக்க முடிகிறது, இது டெல்லியை விட சிறந்தது. உணவு கூட மிகவும் நன்றாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
நெட்டிசன்கள்
கெவின் சாமின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதில் பலரும் ஹைதராபாத் சிறந்த நகரம் என்பதை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவர், "சந்தேகமே வேண்டாம்.. இந்தியாவில் வாழ்வதற்கு ஹைதராபாத் தான் சிறந்த நகரம்.. உணவும் கூட அருமையாக இருக்கும்" என்று பதிவிட்டார். பல காலமாக அண்டர் ரேட்டட் ஆக இருந்த ஹைதராபாத்தின் மதிப்பை இப்போது தான் மக்கள் உணர்கிறார்கள் என்று இன்னொரு நபர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications