3 உயிரை காவு வாங்கிய கள்ளக்காதல்.. மனைவி கழுத்தை அறுத்து.. டாக்டர் தற்கொலை.. தூக்கில் தொங்கிய காதலி!
மனைவியை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார் டாக்டர் ஒருவர்
பெங்களூரு: கள்ளக்காதல் கொடுமை இது.. மனைவி தன்னுடைய உறவுக்கு தடையாக இருப்பதால் அவருக்கு வயிற்றில் ஊசியை போட்டு, அவரது கழுத்தையும் அறுத்து கொன்றுவிட்டார் பல் டாக்டர் ஒருவர்.. பிறகு போலீசுக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.. டாக்டர் தற்கொலை செய்துகொண்டதால், கள்ளக்காதலியும் தூக்கில் தொங்கிவிட்டார்!
கர்நாடக மாநிலம் சிக்மகளூருவை சேர்ந்தவர் ரேவந்த்.. இவர் ஒரு பல் டாக்டர்.. இவரது மனைவி கவிதா.. 31 வயதாகிறது.. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கவிதா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.. இதையடுத்து போலீசார் விசாரணையும் நடந்தது.. அபபோது கவிதா வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

கவிதா
அதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்குமோ என்று போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த சமயத்தில் கவிதாவின் பெற்றோர் விசாரணையின்போது ஒரு புகார் தெரிவித்தனர். அதில், தங்கள் மருமகன் ரேவந்த்தான் மகளின் சாவுக்கு காரணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள். மேலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதை பார்த்து அதிர்ந்த போலீசார், விசாரணையை துரிதப்படுத்தினர்... அப்போது பல பகீர் தகவல்கள் வெளியாகின.

ஹர்சிதா
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த ஹர்சிதா என்ற பெண்ணுடன் உறவு வைத்திருந்துள்ளார் ரேவந்த்.. 32 வயதான ஹர்சிதாவுடன் ரேவந்த் அடிக்கடி ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.. ஹர்சிதா ஏற்கனவே கல்யாணமானவராம்.. இவர்கள் உல்லாசமாக இருந்தபோது கவிதா அதை நேரிலேயே பார்த்துவிட்டு, கண்டித்தும் உள்ளார்.. ஆனால் இருவருமே கள்ளக்காதலை கைவிடவில்லை.. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கொலை
சம்பவத்தன்றும் இருவருக்கும் தகராறு வந்திருக்கிறது.. தன்னுடைய கள்ளக்காதலுக்கு கவிதா இடையூறாக இருக்கவும், ஆத்திரமடைந்து அவரை கொல்ல முடிவு செய்தார். கவிதாவின் வயிற்றில் ஊசி போட்டார்.. அவர் மயங்கி விழுந்ததும், கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுவிட்டார்.. உடனே வீட்டில் இருந்த நகைகளையும் எடுத்து வைத்து கொண்டார்.

தற்கொலை
2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிய ரேவந்த், மனைவியை நகைக்காக கொன்றுவிட்டார்கள் என்று டிராமா செய்து அனைவரையும் நம்ப வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர் என்பதுமே ரேவந்த்துக்கு பயம் வந்துவிட்டது.. அதனால் தலைமறைவாக இருந்த அவர், திடீரென ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகள்
ரேவந்த் இப்படி தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டதும் கள்ளக்காதலி ஹர்சிதா தன் வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஒரு கள்ளக்காதல் கொலை, 2 தற்கொலைகள் வரை சென்றுவிட்ட நிலையில், அந்த குழந்தைகள் 2 பேரும் தாய்-தந்தையின்றி தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications