பாஜக கூட்டணியை எதிர்த்ததால்.. ஜேடிஎஸ் தலைவர் இப்ராஹிம் பதவி நீக்கம்.. அடுத்த தலைவராகும் குமாரசாமி?
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்தது. இதனை ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவர் சிஎம் இப்ராஹிம் கடுமையாக எதிர்த்து போர்க்கொடி தூக்கிய நிலையில் அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்குவதாக தேவேகவுடா அறிவித்துள்ளது. மேலும் அடுத்த தலைவராக தேவேகவுடாவின் மகன் குமாரசாமி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை நடத்தி வருகிறது. இவர் தற்போது கட்சியின் தேசிய தலைவராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். இவரது இளைய மகன் குமாரசாமி கர்நாடகா முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும் குமாரசாமி நீண்டகாலமாக ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜேடிஎஸ் கட்சியில் சிஎம் இப்ராஹிம் இணைந்தார். ஜேடிஎஸ்சை பொறுத்தமட்டில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என தன்னை காட்டி கொள்கிறது.
இந்நிலையில் தான் குமாரசாமியின் உடல்நல பிரச்சனை மற்றும் இஸ்லாமியர் ஒருவரை மாநில தலைவராக நியமித்தால் அது கட்சிக்கு வலு சேர்க்கும் என அவர்கள் நினைத்தனர். இதையடுத்து சிஎம் இப்ராஹிமை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இத்தகைய சூழலில் தான் ஜேடிஎஸ் கட்சியால் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்த சாதனையையும் செய்ய முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஜேடிஎஸ் கட்சி செல்வாக்காக உள்ள பழைய மைசூர் மாவட்டங்களில் பெரும் சரிவை சந்தித்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. குமாரசாமி கடந்த செப்டம்பர் 22ம் தேதி டெல்லலியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதன்பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தேவேகவுடாவும் உறுதி செய்தார்.
இதற்கிடையே தான் பாஜக கூட்டணியில் இணைந்ததை ஜேடிஎஸ் மாநில தலைவரான சிஎம் இப்ராஹிம் விரும்பவில்லை. இதற்கிடையே ஜேடிஎஸ் கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் அதில் இருந்து விலக தொடங்கி உள்ளனர். மேலும் சிஎம் இப்ராஹிம், பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதோடு ‛‛பாஜக கூட்டணியை நிராகரிக்கிறோம். எனது தலைமையிலான கர்நாடகா மாநில ஜேடிஎஸ் கட்சி இதனை ஒருபோதும் ஏற்காது'' என பகிரங்கமாக அறிவித்தார்.
இது தற்போது ஜேடிஎஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடிஎஸ்சின் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருக்கு விருப்பம் இல்லை. இந்நிலையில் தான் சிஎம் இப்ராஹிம் விரைவில் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கிடையே தான் இன்று சிஎம் இப்ராஹிம் ஜேடிஎஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேவேகவுடா இன்று வெளியிட்டார்.
ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவரான சிஎம் இப்ராஹிம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சியின் அடுத்த கர்நாடக மாநில தலைவராக மீண்டும் குமாரசாமியே செயல்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications