"கமலா சதி".. பாஜகவின் அடுத்த ஆபரேஷன்.. லீக்கான ஆடியோ.. திரியை கொளுத்திய கர்நாடக காங்கிரஸ்.. என்னாச்சு
பாஜகவின் "ஆடியோ டேப்" ஒன்றை வெளியிட்டு, காங்கிரஸ் கொளுத்தி போட்டுள்ளது
பெங்களூரு: பாஜகவின் "ஆடியோ டேப்" ஒன்றை வெளியிட்டு, காங்கிரஸ் கொளுத்தி போட்டுள்ளது, கர்நாடக சட்டசபையில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், ஆட்சியை தக்க வைக்க பாஜக களத்தில் குதித்துள்ளது..
அம்மாநிலத்தில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது..

மாம்பழம்
அதனால், அங்குள்ள அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மக்களின் குரல் என்ற பெயரில் தன்னுடைய தேர்தல் பிரச்சார யாத்திரையை தொடங்கியது.. கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமைய்யாவும் இணைந்து வரும் 29ம் தேதி வரை ஒரே பஸ்ஸில் பயணித்து இந்த பிரச்சார யாத்திரையை மேற்கொள்ள உள்ளனர். ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகையை வெளியிடப்பட்டது.

டேப் ஆடியோ
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மக்கள் தெரிவிக்கும் வகையிலான வெப்சைட் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.. இப்படி பல வியூகங்களை கையில் எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில், ஒரு ஆடியோவை காங்கிரஸ் தரப்பு ரிலீஸ் செய்துள்ளது.. அதாவது, "மக்களின் ஆணையின்றி தன்னுடைய கட்சி மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்கும்" என்று பாஜக மேலவை உறுப்பினர் சிபி யோகேஸ்வரா பேசியிருக்கிறாராம்.

ஆபரேஷன்
அவர் பேசியதாக சொல்லித்தான், அந்த ஆடியோ டேப் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது... காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த ஆடியோவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த ஆடியோவில், "பாஜக ஆட்சி அமைக்கும், ஆனால் மக்கள் ஆணையால் கிடையாது. பாஜகவுக்கு மக்கள் ஆணை கிடைக்காது.. ஆனால் கட்டாயமாக ஆட்சி அமைக்கும்... மரத்தில் இருக்கும்போது மாம்பழம் பழுக்க வைக்க முடியும், அதேவேளையில் ரசாயன முறையிலும் பழுக்க வைக்க முடியும்" என்று யோகேஸ்வரா சொல்வதுபோல் அந்த ஆடியோ இருக்கிறதாம்..

கமலா சதி
இதையே ஆதாரமாக கையில் எடுத்து கொண்டு, காங்கிரஸ் கோதாவில் குதித்துவிட்டது.. அதுமட்டுமல்ல, "இது பாஜகவின் மற்றொரு ஆப்ரேஷன் கமலா சதி" என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த ஆடியோ டேப் குற்றச்சாட்டை பாஜக மேலவை உறுப்பினர் சி.பி. யோகேஸ்வரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். அந்த ஆடியோவில் பேசியது நான் கிடையாது என்று ஆவேசமாக சொல்லி வருகிறார்.. ஆனாலும், ஆடியோ டேப் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications