பெங்களூர் பொறுப்பு அமைச்சர் யாரு தெரியுமா? டிகே சிவக்குமாருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இதோ லிஸ்ட்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவி டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் முழு பட்டியல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியை பெற்றது. மாறாக பாஜக 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வென்றனர்.

இதையடுத்து முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றனர். அதன்பிறகு 32 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். நீண்ட இழுபறிக்கு பிறகு அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர் நியமனம் செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் பொறுப்பு அமைச்சர்கள் என்பவர்கள் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். ஒருவேளை குறிப்பிட்ட மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் இன்னொருவர் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.
அந்த வகையில் தான் கர்நாடகாவில் நேற்று பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கர்நாடகாவில் மொத்தம் டிகே சிவக்குமார் உள்பட 33 பேர் அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் மாநிலத்தில் 31 மாவட்டங்கள் தான் உள்ளன. இதனால் 2 அமைச்சர்களை விடுத்து பிற 31 பேருக்கும் பொறுப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் அந்தந்த மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணி மற்றும் அரசு திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் தான் பொறுப்பு அமைச்சர்கள் நியமனத்தில் சில ஆச்சரியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதாவது பெங்களூர் நகர மாவட்ட பொறுப்பு அமைச்சராக துணை முதல்வராக டிகே சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று 4 பேர் அமைச்சர்களாக இருக்கும் நிலையில் தான் அவர்களுக்கு பதிலாக டிகே சிவக்குமார் பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவியை தட்டித்தூக்கி உள்ளார்.
மேலும் இந்தியாவின் முக்கிய நகராக உள்ள பெங்களூர் பொறுப்பு அமைச்சர் என்பது கவுரவ பதவியாகவும், அதேநேரத்தில் கட்சி உள்பட பல விஷயங்களில் வளம்கொழிக்கும் வகையில் உள்ளது. இதனால் தான் டிகே சிவக்குமார் குறிவைத்து இந்த பதவியை கைப்பற்றி உள்ளார். ஏற்கனவே அவர் பெங்களூர் நகர மேம்பாட்டு துறையை கையில் வைத்திருக்கும் நிலையில் பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளார். இதன்மூலம் பெங்களூர் நகரில் புதிய மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.
டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமான ராமநகர் பொறுப்பு அமைச்சராக ராமலிங்க ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துமகூருவுக்கு பரமேஸ்வர், கதக்கிற்கு எச்கே பட்டீல், பெங்களூர் புறநகருக்கு கேஎச் முனியப்பா, சிக்கமகளூருவுக்கு கேஜே ஜார்ஜ், விஜயாப்புராவுக்கு எம்பி பட்டீல், தட்சிண கன்னடாவுக்கு தினேஷ் குண்டுராவ், மைசூருவுக்கு எச்சி மகாதேவப்பா ஆகியோர் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பெலகாவிக்கு சதீஷ் ஜார்கிகோளி, மண்டியாவுக்கு செலுவராயசாமி, கலபுரகிக்கு பிரியங்க் கார்கே, ஹாவேரிக்கு சிவானந்த பட்டீல், விஜயநகருக்கு ஜமீர்அகமதுகான், யாதகிரிக்கு சரணபசப்பா தர்சானப்பூர், பீதருக்கு ஈஸ்வர் காண்ட்ரே, தாவணகெரேவுக்கு எஸ்எஸ் மல்லிகார்ஜூன், தார்வாருகு்கு சந்தோஷ்லாட், ராய்ச்சூருக்கு சரண பிரகாஷ் பட்டீல், பாகல்கோட்டைக்கு ஆர்பி திம்மாபூர், உடுப்பிக்கு லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் பொறுப்பு அமைச்சராக செயல்பட உள்ளனர்.
இதுதவிர சாம்ராஜ்நகருக்கு வெங்கடேஷ், கொப்பலுக்கு சிவராஜ் தங்கடகி, சித்ரதுர்காவுக்கு டி சுதாகர், பல்லாரிக்கு நாகேந்திரா, ஹாசனுக்கு கேஎன் ராஜண்ணா, கோலாருக்கு பைரதி சுரேஷ், உத்தர கன்னடாவுக்கு மங்கல் வைத்தியா, சிவமொக்காவுக்கு மது பங்காரப்பா, சிக்பள்ளாப்பூருக்கு எம்சி சுதாகர், குடகுக்கு என்எஸ் போசராஜ் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் கிருஷ்ண பைரேகவுடா, ரகீம்கான் ஆகியோருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்படவில்லை.
-
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ












Click it and Unblock the Notifications