டி.கே.சிவகுமாருக்கு புதிய சிக்கல்.. “நாங்க எல்லாம் அமைச்சராக கூடாதா?” 2 எல்ஏக்கள் ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதியதாக 20 அமைச்சர்கள் பொறுப்பேற்க இருக்கும் நிலையில், தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்று கூறி 2 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த ராஜினாமா கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். இதுவும் முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு எதிரான விமர்சனங்களாக வெடித்திருக்கின்றன.

DK Shivakumar

கர்நாடகாவை பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர், அக்கட்சி எதிர்கொண்ட முக்கிய பிரச்சனை.. யாரை முதல்வராக்குவது என்பதுதான். சித்தராமையா சீனியர்.. ஆனால், அவரே எத்தனை காலத்திற்கு முதல்வராக இருக்க முடியும்? கட்சிக்காக உழைத்தவன் நான்.. எனக்கு முதல்வர் ஆசை இருக்காதா? என டி.கே.சிவகுமார் போர்க்கொடி தூக்கியிருந்தார். சரி அப்போதைக்கு பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று நினைத்து.. ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்துக்கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் தலைமை சொல்லிவிட்டது.

எனவே சில நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சனை சீரியஸாக வெடிக்க.. சித்தராமையாவை தூக்கிவிட்டு அந்த இடத்தில் சிவகுமார் உட்கார வைக்கப்பட்டார்.

சிவகுமார் அதிகாரத்திற்கு வந்து சும்மா இருப்பரா? சித்தராமையா ஆதரவாளர்களை தூக்கிவிட்டு புதிய அமைச்சரவையை உருவாக்கினார். இப்படி உருவாக்கப்பட்ட அமைச்சரவைதான் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. மொத்தம் 20 புதிய அமைச்சர்கள் இன்று புதியதாக பொறுப்பேற்கின்றனர். யார் யார் பொறுப்பேற்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைமை வெளியிட்ட நிலையில், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த 2 எம்எல்ஏக்கள்.. இடம் கிடைக்காததால் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கின்றனர்.

தகுதி உள்ள மூத்த அமைச்சர்களை ஓரம் கட்டிவிட்டு, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே பதவி தரப்படுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் கொந்தளித்துள்ளனர். இந்த அதிருப்தி காரணமாக விஜயபுரா தொகுதி எம்எல்ஏ யஷ்வந்த்ராய கொளடா மற்றும் பேலூர் தொகுதி எம்எல்ஏ கோபாலகிருஷ்ணா ஆகியோர் ராஜினாமா செய்ய உள்ளனர். இந்த அறிவிப்பு கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+