என்னாச்சு? கைக்கொடுக்க போன டிகே சிவக்குமார்.. கண்டுக்கொள்ளாத அரவிந்த் கெஜ்ரிவால்! பரவும் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் 2 வது ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்துக்கு வரும் தலைவர்களை அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கைக்குலுக்கி வரவேற்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கைக்கொடுக்காமல் அவரை காத்திருக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் முதல்கட்டமாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் 2வது கட்ட ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை டின்னர் விருந்துடன் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதில் மொத்தம் 26 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, முதல்வர் முக ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2 கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal, Punjab CM Bhagwant Mann, AAP MPs Raghav Chadha and Sanjay Singh arrive for the second day of joint Opposition meeting in Bengaluru, Karnataka. pic.twitter.com/LZaLZTTf1B
— ANI (@ANI) July 18, 2023
மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து இன்று 2வது நாள் கூட்டம் துவங்கியது. காலை 11 மணிக்கு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளா முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி காலமானதால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக 12 மணியளவில் துவங்கியது. திமுக சார்பில் முதல்வர் முக ஸ்டாலின், டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி கட்சிகள் தொகுதிகளை பிரித்து கொள்வது, கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுப்பது, அடுத்தக்கட்டமாக ஆலோசனை கூட்டத்தை எப்போது நடத்துவது? கூட்டணிக்கான பெயர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்கள் வருகை தந்தனர்.
இந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும் நிலையில் வாசலில் நின்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் கட்சி தலைவர்கிளை வரவேற்றனர். வருகை புரிந்த ஒவ்வொரு தலைவர்களுக்கும் கைக்குலுக்கி அவர்கள் வரவேற்றனர். இந்த வேளையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம்ஆத்மி எம்பிக்கள் ராகவ் சதா, சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் வந்தனர்.
அப்போது அவர்களை டிகே சிவக்குமார் வரவேற்றார். இருகைகளையும் கூப்பியபடி அவர்களை நோக்கி டிகே சிவக்குமார் நடந்து சென்றார். இதை கவனித்த அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் உள்ளிட்டோர் டிகே சிவக்குமாருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதையடுத்து டிகே சிவக்குமார் அவர்களை நோக்கி நடந்து சென்று பகவந்த் மானிடம் கைக்குலுக்கி வரவேற்றார்.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கைக்குலுக்கும் நோக்கத்தில் டிகே சிவக்குமார் சென்று கையை நீட்டினார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் அவரை கவனிக்காமல் பத்திரிகையாளர்களை நோக்கி வணக்கம் செலுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து டிகே சிவக்குமார் கையை நீட்டியபடியே அங்கு நின்றார்.
அதன்பிறகு டிகே சிவக்குமாரை நோக்கி திரும்பிய கெஜ்ரிவால் சிரித்த முகத்துடன் அவரிடம் கைக்குலுக்கி தோளை தட்டிக்கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் குழுவாக போட்டோ எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications