"3 தமிழர்களை அரசே கொலை செய்துவிட்டது.." கர்நாடக சட்டசபையில் கொந்தளித்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 3 தமிழர்களை, டிகே சிவக்குமாரின் அரசே கொலை செய்துவிட்டது என கர்நாடக சட்டசபையில் அம்மாநில எதிக்கட்சித் தலைவர் ஆர்.அசோகா (BJP) குற்றம் சாட்டி பேசினார். கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேரை வனத்துறை சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில் அம்மாநில சட்டசபையில் பாஜக சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்த போதும், சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது கூட, கர்நாடக அரசு சட்டசபையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் அரசாங்கம், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளது பாஜக.

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் இன்று கர்நாடக சட்டசபையிலும் புயலை கிளப்பியது. கர்நாடக சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அவை இன்று கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா பேசினார்.

DK Shivakumar government itself killed three Tamils - BJP erupts in Karnataka Assembly

கர்நாடக அரசு கொலை செய்துவிட்டது

அவர், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.. சட்டசபை நடந்துகொண்டிருக்கும் போது கூட இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அரசு தாமாக முன் வந்து அறிக்கை தாக்கல் செய்யும். ஆனால் இந்த அரசு சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆன பிறகும் கூட இன்னமும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

அரசு வழக்கமாக செய்ய வேண்டியதை எல்லாம் செய்யாமல் தவறிவிட்டது. கர்நாடக அரசு தமிழகத்தை சேர்ந்த 3 பேரையும் கொலை செய்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையில், கர்நாடக அரசு நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும் விஜய் பதிவு செய்திருக்கிறார்.

இப்படி தமிழ்நாடு அரசு, நமது மாநிலம் பற்றி கண்டனம் தெரிவித்த பிறகும் கூட, சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போதும் இந்த அரசு அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது சரியில்லை. மோசமான முன்னுதாரணமாகும். கண்டபடி சுட்டுக்கொல்ல தமிழர்கள் கேட்பார் இல்லாதவர்களா. பல லட்சம் தமிழர்கள் இந்த கர்நாடகாவில் வாழ்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் இந்த காங்கிரஸ் அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது, இவ்வாறு அவர் ஆக்ரோஷமாக பேசினார்.

நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும்

எதிர்க்கட்சி தலைவர் அசோக் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, பாஜக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று "அது எப்படி, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளை சர்வ சாதாரணமாக சுட்டு கொல்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். அப்போது அரசு சார்பில் கர்நாடக துணை முதல்வர் ஜி பரமேஸ்வரா எழுந்து நின்று, 'அரசாங்கமே இந்த கொலையை செய்ததது என்று சொல்வதை ஏற்க முடியாது. இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது குறித்து, விவாதிக்க எதிர்க்கட்சி நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசு அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி விவாத்திற்கு பதிலளித்து பேச வேண்டும் என்று எதிர்க்கசிகட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

சபாநாயகர் சலீம் அகமது, பாஜக எம்.எல்.ஏக்களை அமைதியாக இருக்குமாறு கூறினார். ஆனால், பாஜக எம்.எல்.ஏக்கள் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகள் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தமிழக முதல்வர் விஜய்யும் இந்த விவகாரத்தில் கர்நாட்க அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+