Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தராமையாவுக்கு போகும் பிரஷர்.. கைமாறும் முதல்வர் பதவி? டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை முக்கியம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு உட்கட்சி பூசல் வெடிக்கும் சூழல் நிலவுகிறது. ஏற்கனவே சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் டிகே சிவக்குமார் கூறியுள்ள சில கருத்துகள் அங்கு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இப்போது சித்தராமையா முதல்வராக இருக்கிறார். டிகே சிவக்குமார் துணை முதல்வராக இருக்கிறார். அங்குக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து 2.5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இதை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

DK Shivakumar Hints at Quitting KPCC President Amid Power Struggle with Siddaramaiah for top post

டிகே சிவக்குமார்

இதற்கிடையே டிகே சிவக்குமார் நேற்றைய தினம் கூறிய சில கருத்துகள் பேசுபொருளானது. அவர் இப்போது கர்நாடக துணை முதல்வராக மட்டுமின்றி, அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருக்கிறார். அந்த பதவியில் இருந்து சீக்கிரம் விலகலாம் என்று அவர் கூறியிருக்கிறார். பெங்களூரில் இது தொடர்பாகப் பேசிய அவர், "நான் நிரந்தரமாக இந்தப் பதவியில் இருக்க முடியாது. 5.5 ஆண்டுகள் ஆகிவிட்டன. மார்ச் மாதத்துடன் ஆறு ஆண்டுகள் முடிகிறது" என்றார்.

பேசுபொருள்

மேலும், தான் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அவர் "இங்கு யாரும் நிரந்தரமானவர்கள் அல்ல" என்று கூறினார். சரியாக அப்போதுதான் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்தனர். அவர்களை டிகே சிவக்குமார் அப்படிக் கோஷமிட வேண்டாம் என கூட சொல்லவில்லை. இப்போது இதுவே பேசுபொருளாகியிருக்கிறது.

அதேபோல அமைச்சர் பதவி கேட்டு அழுத்தம் கொடுக்கும் எம்.எல்.ஏ.க்கள் குறித்த கேள்விக்கு, "கடினமாக உழைப்பவர்களுக்கு ஆசைகள் இருக்கும். இது தவறு என்று சொல்ல முடியுமா?" என்றார்.. அப்போது செய்தியாளர் ஒருவர் நேரடியாகவே கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்று கேட்டார். அதற்கு ஆம் இல்லை என்று நேரடியாகப் பதிலளிக்காமல், நல்ல ஜோதிடரைப் பாருங்கள் என்று மட்டும் பதிலளித்தார்.

ஏன் முக்கியம்

கர்நாடகாவில் கடந்த 2023ல் தேர்தல் நடந்த நிலையில், அப்போது காங்கிரஸ் வெற்றிக்கு டிகே சிவக்குமார் பிரச்சாரம் ரொம்பவே முக்கிய காரணமாக இருந்தது. அவர் மாநிலம் முழுக்க சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்தார். அதன் விளைவாகவே காங்கிரஸ் அங்குள்ள 224ல் 135 தொகுதிகளில் வென்றது. அப்போது முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டது.

என்ன நடந்தது!

இதனால் யார் முதல்வர் என்பதை முடிவு செய்ய முடியாமல் சில நாட்கள் வரை இழுபறி கூட நிலவியது. சித்தராமையாவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் ஆதரவு இருந்ததுடன், பெரும்பாலான எம்எல்ஏக்களும் அவருக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து அவர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்குத் துணை முதல்வர் பதவியுடன், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலும் தொடர அனுமதி தரப்பட்டது.

இருப்பினும், அப்போது 2.5 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருப்பார்.. அடுத்து நீங்கள் முதல்வராகப் பதவியேற்பீர்கள் என்று டிகே சிவக்குமாரிடம் உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை என்றாலும் கூட அப்போதே பரவலாகப் பேச்சுகள் எழுந்தன. இப்போது 2.5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் முதல்வர் பதவியை தங்கள் தலைவருக்குத் தர வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+