இந்தியாவிலேயே பணக்கார முதல்வர்.. ஆனாலும் 160 ஆண்டு பழைய பங்களாவிற்கு மாறிய டிகே சிவக்குமார்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவிலேயே பணக்கார முதல்வராக கர்நாடகாவின் டிகே சிவக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் அவர் பெங்களூரில் உள்ள தனது சொகுசு பங்களாவை விட்டுவிட்டு 160 ஆண்டு பழமையான பங்களாவிற்கு நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக குடியேற உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

dk-shivakumar-moves-into-160-year-old-heritage-building-kumara-krupa-guest-house-in-bengaluru

கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் தற்போது பெங்களூர் சதாசிவநகரில் வசித்து வருகிறார். டிகே சிவக்குமாருக்கு அங்கு சொந்தமாக பெரிய பங்களா உள்ளார். முதல்வரான பிறகும் டிகே சிவக்குமார் தனது சொந்த பங்களாவிலேயே வசித்து வருகிறார். அரசு இல்லத்துக்கு அவர் செல்லவில்லை.

இந்நிலையில் தான் நாளை மறுநாள் டிகே சிவக்குமார் அரசு இல்லத்துக்கு மாற உள்ளார். பெங்களூர் குமார கிருபா விருந்தினர் மாளிகைக்கு (Kumara Krupa Guest House) குடியேற உள்ளார். டிகே சிவக்குமார் குடியேறுவதையொட்டி இந்த விருந்தினர் மாளிகை புனரமைக்கப்பட்டு 'கங்கா' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அனைத்து புனரமைப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில் டிகே சிவக்குமார் சிறப்பு பூஜைகளுடன் நேற்று விழா நடத்தினார். அதன்பிறகு புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட தொழிலாளர்களுடன் டிகே சிவக்குமார் அமர்ந்து விருந்து சாப்பிட்டார். இங்கு மொத்தம் 12 பெரிய அறைகள் உள்ளன. கிச்சன், டைனிங் ஹால் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன.

அறைகள் மற்றும் மீட்டிங் ஹால்கள் உள்ளிட்டவற்றுக்கு கர்நாடகா ஆறுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. சதுரஅடிக்கு ரூ.60 மதிப்பு கொண்ட 'கோடா ஸ்டோன்' தளகற்கள், சதுரஅடிக்கு ரூ.80 மதிப்பு கொண்ட கிரானைட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த விருந்தினர் மாளிகை புனரமைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் மேல்புறம் தேசியக்கொடி மற்றும் கர்நாடகா கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக டிகே சிவக்குமார் குமாரகிருபா விருந்தினர் மாளிகைக்கு குடியேற உள்ளார். இந்தியாவிலேயே டிகே சிவக்குமார் தான் பணக்கார முதல்வர். டிகே சிவக்குமார் தனது தேர்தல் வேட்புமனுவில் ரூ.1,413.80 கோடியில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவர் தற்போது அவர் தனது வசதிக்காக பெங்களூரில் அடையாளமாகவும், பாரம்பரிய கட்டடமாகவும் இருக்கும் குமாரகிருபா விருந்தினர் மாளிகை குடியேறி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் குமாரகிருபா விருந்தினர் மாளிகை 160 ஆண்டுகால பழமையான கட்டடம். இந்த விருந்தினர் மாளிகை கடந்த 1956ம் ஆண்டில் கட்டப்பட்டது. கடந்த 1927 ம் ஆண்டில் மகாத்கா காந்தி 2 மாதம் வரை இந்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இப்படி புகழ்பெற்ற கட்டத்தை டிகே சிவக்குமார் தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த உள்ளார். அதன் பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளது என்று பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை டிகே சிவக்குமார் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ''குமார கிருபா விருந்தினர் மாளிகையில் என்னுடைய பாதுகாப்புக்காக தான் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி பெரிய அளவில் எங்கும் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த கட்டத்தின் பழமை மாறாமல் தான் புனரமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

முதல்வரான பிறகு டிகே சிவக்குமார் வசித்து வந்த சதாசிவ நகரில் உள்ள அவரது சொந்த பங்களாவிற்கு அதிகளவில் மக்கள் வருகை தந்தனர். ஆனால் அங்கு போதிய அளவு இடவசதி இல்லை. அதேபோல் அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்துவதற்கும் தனி அறை இல்லை. இதனால் அரசு இல்லத்தை பயன்படுத்த விரும்பினார்.

குறிப்பாக குமாரகிருபா ரோட்டில் உள்ள காவிரி இல்லத்தில் தங்க விரும்பினார். டிகே சிவக்குமாரின் அரசியல் குருவாக கருதப்படும் முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா இங்கு தான் தங்கினார். இதனால் டிகே சிவக்குமாரும் அதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் தற்போது காவிரி இல்லத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாலும் இன்னும் அவர் அந்த இல்லத்தை காலி செய்யவில்லை. இதனால் வேறு வழியின்றி டிகே சிவக்குமார் குமாரகிருபா விருந்தினர் மாளிகையை தனது அலுவலக இல்லமாக மாற்றி உள்ளார்.

குமாரகிருபா விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், பொதுமக்களை சந்திக்கவும் போதிய அளவில் இடவசதி உள்ளது. இதனால் டிகே சிவக்குமார் தனது சொந்த சொகுசு பங்களாவை விட்டு 160 ஆண்டு கால பழமையான சொகுசு பங்களாவில் குடியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+