டிகே சிவக்குமார் VS சித்தராமையா.. சோனியா - ராகுல்- பிரியங்காவின் ஆதரவு யாருக்கு? பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடிக்க டிகே சிவக்குமார் முயன்று வருகிறார். அதேவேளையில் முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையா காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில் தான் காங்கிரஸ் மேலிட தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோரின் ஆதரவு யாருக்கு உள்ளது? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தொடர்ந்து வருகின்றனர். தற்போது சித்தராமையா இரண்டரை ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையே தான் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

dk-shivakumar-vs-siddaramaiah-who-will-sonia-rahul-priyanka-supports-for-karnataka-cm-details

இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் தரப்பினர் தனித்தனியாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 1ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை டெல்லி அழைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று சொல்லப்படுகிறது.

சோனியா - பிரியங்கா ஆதரவு

இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரை முதல்வராக நியமனம் செய்ய சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கர்நாடகாவின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக செயல்பட்ட ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் விரும்பகின்றனர். கர்நாடகாவில் அடுத்தக்கட்ட தலைவரை உருவாக்க வேண்டும். கர்நாடகாவில் ஒக்கலிகர் (டிகே சிவக்குமார் ஜாதி) சமுதாய மக்களின் வாக்குகளை தக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது டிகே சிவக்குமார் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்கு பரிகாரமாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி - கேசி வேணுகோபால்

அதேவேளையில் ராகுல் காந்தி மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவை முதல்வராக தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். டிகே சிவக்குமாருக்கு தற்போது 63 வயது தான் ஆகிறது. இன்னும் அவருக்கு காலங்கள் உள்ளது. அதோடு இரண்டரை ஆண்டு காலம் கடந்து விட்டது. இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தான் பாக்கி உள்ளது. டிகே சிவக்குமார் காங்கிரஸ் தலைவராக திறமையாக செயல்பட்டு வருகிறார்.

இதனால் அடுத்த 2028 சட்டசபை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி தேர்தலை சந்திக்கலாம். மேலும் சித்தராமையாவை தற்போது முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் இஸ்லாமியர்கள், எஸ்டி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினரின் அதிருப்தியை காங்கிரஸ் சம்பாதிக்கலாம்.

அஹிண்டா வாக்கு பாதிப்பு

ஏனென்றால் சித்தராமையா AHINDA (மைனாரிட்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சமுதாயத்தை குறிக்கும் சொல்) சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்ற தலைவராக உள்ளார். தற்போது அவரை முதல்வராக 5 ஆண்டை நிறைவு செய்தால் அடுத்த தேர்தலிலும் அந்த மக்களிடம் ஓட்டுகளை பெற்று எளிதாக கர்நாடகாவில் வெல்ல முடியும்.

மேலும் தற்போது வரை சித்தராமையாவின் மீது எந்த ஊழல், முறைகேடு புகாரும் இல்லை. பெரிய அளவில் மாநிலத்தில் அதிருப்தியில்லை. நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதோடு சித்தராமையாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிகளவில் உள்ளன. இதனால் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் ஆகியோர் எண்ணுவதாக கூறப்படுகிறது.

கார்கே நடுநிலை

அதேவேளையில் மல்லிகார்ஜூன கார்கே நடுநிலை வகித்து வருகிறார். அவர் டிகே சிவக்குமார், சித்தராமையா என இருவரில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. தனது சொந்த மாநிலம் என்பதால் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுக்கு இருக்கும் பலம் பற்றி கட்சியும், சித்தராமையாவின் முதல்வராக தொடர்ந்தால் கட்சிக்கம் கிடைக்கும் சாதகம், பாதகம் பற்றியும், டிகே சிவக்குமாரை முதல்வராக்கினால் ஏற்படும் லாபம், நஷ்டம் பற்றியும் கட்சி மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+