டிகே சிவக்குமார் தம்பி VS தேவகவுடா மருமகன்.. பெங்களூர் ரூரலில் வெற்றி யாருக்கு? -டைம்ஸ் நவ் கணிப்பு
பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் மீண்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் இந்நிலையில் தான் பெங்களூர் புறநகரில் வெற்றி யாருக்கு என்பது குறித்த பரபரப்பான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமார், அம்மாநில துணை முதல்வராகவும் உள்ளார். இரது தம்பி டிகே சுரேஷ் பெங்களூர் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார்.

2013 இடைத்தேர்தல், 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பெங்களூர் புறநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் டிகே சுரேஷ்.
கடந்த 2019ல் கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தேர்தலில்களில் 27 இடங்களில் காங்கிரஸ் தோற்ற நிலையில் டிகே சுரேஷ் மட்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
பெங்களூர் புறநகர் தொகுதி என்பது டிகே சுரேஷின் கோட்டையாக உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் டாக்டர் மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளராகி உள்ள மஞ்சுநாத் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) மருமகன் ஆவார்.
டிகே சுரேஷ் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் யார் வெல்வார்கள் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் 7 வது கட்ட லோக்சபா தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெங்களூர் புறநகர் தொகுதியில் யார் வெல்வார்கள் என்பது பற்றி டைம்ஸ் நவ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வெளியாகின.
இதில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் தான் மீண்டும் வெல்வார் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டிகே சுரேஷ் கட 3 தேர்தல்களில் பெங்களூர் புறநகர் தொகுதியில் எளிதாக ஜெயித்தார் ஆனால் இம்முறை பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் கடும் போட்டி அளிக்கலாம் எனவும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications