சிவக்குமார் or சித்தராமையா.. காங். தேசிய தலைமை முடிவு எடுக்கும்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் தொடங்கியுள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகவில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இந்த மாதம் சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. 224 தொகுதிகளுக்காக நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக , மஜத ஆகியவை கடுமையாக போட்டியிட்டன. இதில் தபால் வாக்கு எண்ணப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 135 இடங்களில் அக்ககட்சி வென்றுள்ளது. அது போல் பாஜகவோ 65 இடங்களில் வென்றுள்ளது. ஒரு தொகுதி மட்டும் விடிய விடிய எண்ணிக்கை நடைபெறுகிறது. அந்த தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் கட்சியோ 19 இடங்களில் வென்றுள்ளது. மற்றவை 4 இடங்களில் வென்றுள்ளன.
இந்த நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா தனது தந்தையை முதல்வராக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பழைய மைசூர் பகுதியில் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு பிறகு காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றதற்கு காரணம் சிவக்குமாரின் உழைப்புதான். எனவே அவர்தான் முதல்வராக வேண்டும் என்கிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் யார் முதல்வர் என்பது குறித்து ஒரு உத்தேச பட்டியல் வெளியானது.
அதில் சித்தராமையா பெயர் உள்ளது. அது போல் 3 துணை முதல்வர்களின் பெயர் பட்டியலும் வந்துள்ளது. அதில் டி.கே.சிவக்குமாரின் பெயர் இல்லை. இந்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் 135 எம்எல்ஏக்கள் கூடும் கூட்டம் பெங்களூரில் தொடங்கியது.
சிறிது கால தாமதம் ஆகவே தொடங்கிய எம்.எல்.ஏக்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கர்நாடகவின் அடுத்த முதல்வர் யார்? என்பதை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications