படுத்தா கால் இடிக்குது! கை தூக்கினால் சுவரையே தொடலாம் போல! பெங்களூரில் இந்த வீட்டு வாடகை 25 ஆயிரமாம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வீட்டை வாடகைக்கு எடுப்போர் புலம்பவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட பக்கங்கள் இருக்கிறது. அந்தளவுக்கு அங்கு வீடுகளின் சந்தை மோசமாக இருக்கிறது. இதற்கிடையே இளைஞர் ஒருவர் தான் வசிக்கும் வீட்டின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்
நமது நாட்டின் ஐடி தலைநகரான பெங்களூரில் வீடு வாடகைக்குக் கிடைப்பது அவ்வளவு ஈஸி இல்லை.. அங்கு வீட்டை வாடகைக்கு எடுப்பது எந்தளவுக்குக் கஷ்டமாக உள்ளது என்பதை விளக்கும் போஸ்ட்களை நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

வேலைக்கான நேர்காணல் கூட ஈஸியாக முடிந்துவிடும் போல.. ஆனால், பெங்களூரில் வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான நேர்காணல் அதை விட கடினமாக இருக்கும். அதிலும் பேட்சிலர் என்றால் அது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
பெங்களூர் வாடகை வீடு:
இது போல வாடகையும் கூட அங்கு உச்சத்தில் தான் இருக்கும். எல்லாவற்றும் ஓகே சொல்லிவிட்டு, வீட்டில் வந்தாலும் அது திருப்திகரமாக இருக்காது. ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். பல இடங்களில் மிகக் குறுகிய, சிறிய சைஸ் வீட்டைக் கூட அதிக வாடகைக்கு விடுவார்கள். இது தொடர்பாக இளைஞர்கள் புலம்பும் வீடியோக்களை நாம் இணையத்திலும் பார்த்து இருப்போம்.
அதுபோல ஒரு வீட்டின் வீடியோ தான் இப்போது டிரெண்டாகி வருகிறது. தனது வீட்டின் டூர் எனச் சொல்லி இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், டூர் ஆரம்பிக்கும் முன்பே முடிவது போல இவரது வீடு மிக மிகச் சிறிய சைஸில் இருக்கிறது.
கை நீட்டினால் இடிக்குது:
அந்த வீடியோவில் அவர் தனது தீப்பெட்டி சைஸ் 1BR பிளாட்டை நமக்குக் காட்டுகிறார். ரூமின் நடுவில் நின்று கொண்டு அவர் பக்கவாட்டில் கைகளை நீட்டினால் இரண்டு சுவர்களையும் ஈஸியாக தொட முடிகிறது. திரும்பி நின்று கொண்டு கையையும் காலையும் நீட்டினால் இந்த இரு சுவர்களை கூட தொட முடிகிறது. அந்தளவுக்கு மிகக் குறுகிய தீப்பெட்டி போல இருக்கும் வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.
பிறகு பால்கனி இருக்கு, அதைக் காட்டுகிறேன் எனச் சொல்லி கதவைத் திறந்து காட்டுகிறார். அதுவும் மிகக் குறுகலாகவே இருக்கிறது. அங்கு ஒரு நபர் நிற்க மட்டுமே இடம் இருக்கிறது. அந்தளவுக்குக் குறுகிய பால்கனியை நீங்கப் பார்த்திருக்கவே முடியாது. வீடு குறித்து விளக்கிவிட்டு, கடைசியாகத் தான் அவர் வாடகை எவ்வளவு எனச் சொன்னார். அதுதான் தூக்கி வாரி போட்டது. அவ்வளவு சின்ன வீட்டின் மாத வாடகை ரூ.25,000 ஆகும்.
நக்கல் தான்:
என்ன தான் வாடகை அதிகமாக இருந்தாலும் இதை வைத்துச் சேமிக்கவும் முடிகிறதாம். அதாவது வீடு இவ்வளவு சின்னதாக இருப்பதால் அத்தியாவசியமற்ற எந்தவொரு பொருளையும் வாங்க முடியாது. இதன் மூலம் தனக்குக் கணிசமான தொகை சேமிக்க முடிவதாக அந்த நபர் ஜாலியாக குறிப்பிடுகிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.
மும்பைக்கு இது பரவாயில்லை:
இதுவே இணையத்தில் இப்போது டிரெண்டிகிறது. இது நெட்டிசன்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கிறது. இந்த சிறிய சைஸ் வீட்டிற்கு ரூ.25 ஆயிரம் ரூபாயா இதை ஏற்கவே முடியாது எனப் பலரும் புலம்பித் தள்ளுகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர், மும்பை வீடுகளுடன் ஒப்பிடும் போது இதெல்லாம் பெரிய வீடு தான்பா எனக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்தாண்டு இதேபோல தான் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் வீடியோவை பகிர்ந்திருந்தார். 1BHK வீடான அதுவும் கூட மிகச் சிறியதாகவே இருந்தது. அந்த வீட்டிற்கு ரூ.45 ஆயிரம் வாடகை என அவர் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications