கர்நாடகா வரலாற்றில் 2வது முறைாக! சட்டசபைக்கு செல்லும் அதிக பெண் உறுப்பினர்கள்! எத்தனை பேர் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கர்நாடக தேர்தல வரலாற்றில் 2ஆவது முறையாக அதிக பெண் சட்டசபை உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.
கர்நாடகாவின் 16 ஆவது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில்
கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பாஜக 66 இடங்களிலும் மஜத 19 இடங்களிலும் வென்று பின்னடைவை சந்தித்தன.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தல் வரலாற்றில் 2ஆவது முறையாக அதிக பெண் சட்டசபை உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். பாஜகவில் இருந்து 5 பேர், காங்கிரஸிலிருந்து 4 பேர் , மஜத மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் என மொத்தம் 11 பேர் வென்றுள்ளனர்.
இதற்கு முன்பு 1962 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 18 பெண் எம்எல்ஏக்கள் கர்நாடகா சட்டசபைக்கு தேர்வாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பெண எம்எல்ஏக்களுக்கு அந்தந்த கட்சியின் மகளிரணியினர் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications