மண்டைக்கேறிய உல்லாசம்.. கணவனின் தகாத உறவு.. திடீர்னு வீடியோவில் வந்த மனைவி.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரு: லைவ் வீடியோவில் நடந்த சம்பவத்தை கண்டு, கர்நாடக மாநிலமே பதறிப்போய்விட்டது.. யாரிந்த இளம்பெண்? என்ன நடந்தது அவருக்கு?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆந்திரஹள்ளியைச் சேர்ந்தவர் திலீப்... இவர் மானசா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.. மானசாவும் திலீப்பை அதிகமாக நேசித்தார். இதையடுத்து இருவருமே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.. இப்போது மானசாவுக்கு 25 வயதாகிறது.

தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களுக்குள் தகராறு வெடித்துள்ளது.. வேறொரு பெண்ணுடன் திலீப்புக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், அந்த பெண்ணுடனேயே திலீப் கடந்த ஒன்றரை வருடங்களாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது..
தகாத உறவு: கணவனின் தகாத உறவை, கையும் களவுமாக கண்டுபிடித்த மானசா, இதுகுறித்து திலீப்பிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. எனினும், தன்னுடைய கள்ளக்காதலை திலீப் கைவிடுவதாக இல்லை. இது தொடர்பாகவே, மானசாவிற்கும், திலீப்பிற்கும் தினந்தோறும் சண்டை ஏற்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட நிலையில், ஆந்திரஹள்ளியில் உள்ள தன்னுடைய கணவர் வீட்டிற்கு மானசா நேற்று சாயங்காலம் வந்தார்...
அங்கு தன்னுடைய கணவர் திலீப்பிற்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் தகாத உறவு இருப்பதாக சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.. அதில், இந்த ஒன்றரை வருடங்களாக திலீப் தனக்கு செய்த துரோகம் குறித்தும், அவரது கள்ளக்காதல் குறித்தும் ஒன்றுவிடாமல் புகார் கூறினார்.. இந்த லைவ் வீடியோவை பார்த்து திலீப் குடும்பத்தினர் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்..
பரபரப்பு: வீடியோ பரபரப்பு அடங்குவதற்குள் சிறிது நேரத்திலேயே, மானசா அங்கிருந்த ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆந்திரஹள்ளியே பரபரத்துப்போய்விட்டது.. இந்த தற்கொலை குறித்து தகவலறிந்த படரஹள்ளி போலீசார் விரைந்து வந்து, மானசா உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
இதனிடையே, திலீப் மற்றும் அவரது குடும்பத்தாரால் தான் தங்கள் மகள் தூக்குப்போட்டு இறந்துவிட்டாள் என்று மானசாவின் பெற்றோர் கதறி அழுதவாறே குற்றம் சாட்டினார்கள்.. அத்துடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு, திலீப்பின் உறவினர்கள் மீதும் மானசா குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதியே ரணகளமாகிவிட்டது.
லைவ் வீடியோ: இதற்கு பிறகு படரஹள்ளி போலீசார் இதில் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, மானசா தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறார்கள்.. இதில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் விசாரணை இன்னும் தீவிரமாகும் என்றும் சொல்கிறார்கள்.. லைவ் வீடியோவில் கணவர் மீது புகார் சொல்லிவிட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications