பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசமாக சிக்கிய “டோலோ”.. மாத்திரை விற்றது இப்படிதானா? வெளியான “சீக்ரெட்” - பெரும் மோசடி அம்பலம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: டோலோ 650 மாத்திரைகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்

காய்ச்சல், தலைவலி போன்ற உடன்நல பிரச்சனைகள் ஏற்பட்டால் பலரும் மருத்துவரிடம் கேட்கும் முன்பே எடுத்துக்கொள்ளும் மாத்திரை பாராசிட்டமால்.

இந்த பாராசிட்டமால் வகை மாத்திரிகளை பலர் தயாரித்து வந்தாலும் மைக்ரோலேப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டோலோ என்ற மாத்திரையே மிகவும் பிரபலம்.

அடப்பாவமே! “டோலோ”வுக்கே தலைவலி.. நாடு முழுவதும் நடந்த அதிரடி வருமானவரி சோதனை - என்னாச்சு? அடப்பாவமே! “டோலோ”வுக்கே தலைவலி.. நாடு முழுவதும் நடந்த அதிரடி வருமானவரி சோதனை - என்னாச்சு?

டிரெண்டான டோலோ

டிரெண்டான டோலோ

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் விற்பனையான மாத்திரையாக டோலோ இருந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களும் தீவிர காய்ச்சல் வராமல் இருப்பதற்காக அதிகளவில் டோலோவை உட்கொண்டு வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் 350 கோடி மாத்திரிகைகளை விற்று ரூ.400 கோடி வரை வருவாய் ஈட்டி சாதனை படைத்தது டோலோ. பாராசிட்டமால் என்று சொல்வதை மறந்து மக்கள் டோலோ என்று சொல்லும் அளவுக்கு அது பிரபலமடைந்தது.

டோலோவுக்கே தலைவலி

டோலோவுக்கே தலைவலி

சமூக வலைதளங்களில் டோலோ மாத்திரை குறித்து மீம்ஸ்களும், நகைச்சுவை வீடியோக்களும் அதிகளவில் பகிரப்பட்டன. இந்த நிலையில்தான், டோலோவின் உற்பத்தியாளர்களுக்கே தலைவலியை ஏற்படுத்தும் சம்பவம் பெங்களூருவில் கடந்த வாரம் நடந்தது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் டோலோவை உற்பத்தி செய்யும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் அமைந்து இருக்கிறது.

வருமான வரி சோதனை

வருமான வரி சோதனை


இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து 20 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், தலைநகர் டெல்லி, தமிழ்நாடு, சிக்கிம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள நிறுவனத்துக்கு தொடர்புடைய 40 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 முக்கிய ஆவணங்கள்

முக்கிய ஆவணங்கள்

மைக்ரோ லேப்ஸின் தலைமை மேலாண் இயக்குநர் திலிப் சுரானா, இயக்குநர் ஆனந்த் சுரானா ஆகியோரது இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு இருக்கின்றனர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1000 கோடி பரிசு பொருட்கள்

ரூ.1000 கோடி பரிசு பொருட்கள்

இதற்கிடையே மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1.20 கோடி பணம், ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், மருந்துகளை விளம்பரப்படுத்தில் அதிகளவில் விற்பனை செய்ய முறையற்ற வகையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் இலவச சலுகைகளை அறிவித்திருப்பதும், மருத்துவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதும் தெரியவந்திருக்கிறது.

English summary
IT raid conducted in DOLO 650 tablet Manufacturer Micro Labs in 40 place of Bangalore, Tamilnadu, Delhi, Goa, Punjab: டோலோ 650 மாத்திரைகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X