பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்விக்கி பாய்ஸ்.. பயங்கர டெடிகேட்டட் ஆ இருக்கீங்களேப்பா.. எங்கிருந்து எங்கு சாப்பாடு போகுது பாருங்க

ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு ஸ்விகி நிறுவனம் டோர் டெலிவரி செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆன்லைன் டெலிவரியா இருந்தாலும் நியாயமா வேணாமா?- வீடியோ

    பெங்களூரு: டோர் டெலிவரிதான்.. ஆனால் ஒரு அளவு வேணாமா... ஒருத்தர் ஆர்டர் செய்த சாப்பாட்டை எடுத்து கொண்டு எங்க இருந்து எங்க போய் டெலிவரி செய்திருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்!

    இப்போதெல்லாம் ஆன்லைனில் டோர் டெலிவரி ரொம்பவும் பிரபலமாகி வருகிறது. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு தேவையானது என்னவோ அதை போனில் ஆர்டர் செய்ய, அது கையில் எளிதாக வந்து சேர்கிறது.

    இதில் சில ஆன்லைன் நிறுவனங்கள் ஃபேமஸாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்விகி போன்றவை எல்லாம். இது போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ சில சமயங்களில் புகார்கள், சர்ச்சைகளிலும் விழுந்து வருகின்றது.

     சர்ச்சைகள்

    சர்ச்சைகள்

    சாப்பாட்டில் பூச்சி இருக்கிறது, அளவு குறைவாக இருக்கிறது, வர்ற வழியிலேயே டெலிவரி பாய் சாப்பிட்டுட்டார் என்றெல்லாம் வீடியோக்கள் தினந்தோறும் வெளிவருகின்றன. இந்த சமயத்தில் ஸ்விக்கியில் காமெடி விஷயம் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் பார்கவ் ராஜன்.

     ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    இவர் பக்கத்தில் இருந்த நிறுவனத்தில் தனக்கு சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் இதே பேரில் ராஜஸ்தானில் ஒரு ஹோட்டலும் இயங்கி வருகிறது. பார்கவ் ராஜன் ஆர்டர் செய்தது ராஜஸ்தான் ஹோட்டலில் பதிவாகிவிட்டது. இதைப் பார்த்ததும் ராஜஸ்தான் ஹோட்டல்காரர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

    பிரபாகரன்

    பிரபாகரன்

    பெங்களூரிலிருந்து நமக்கு ஆர்டர் வருகிறதா என்ற ஆச்சரியத்தில் ஆர்டர் செய்த சாப்பாட்டையும் தயார் செய்தார்கள். அதை டோர்டெலிவரி செய்ய பிரபாகரன் என்பவர் ராஜஸ்தானிலிருந்து எடுத்து கொண்டு போய் பெங்களூருவில் உள்ள ராஜனிடம் தந்தார்.

    ட்விட்டர்

    இதை பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகி நின்றிருக்கிறார் ராஜன். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்திலும் ஸ்விக்கி நிறுவனத்தை குறிப்பிட்டு, "வண்டியை என்னா ஸ்பீடில் ஓட்டுறீங்க" என்று கிண்டலாக கேட்டிருக்கிறார். இந்த படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

     ஓவர்தான்

    ஓவர்தான்

    இப்படியெல்லாம் இனி தவறு நடக்காது என ஸ்விகி விளக்கம் அளித்தாலும், டோர் டெலிவரி என்பது ஸ்டேட் டூ ஸ்டேட் நடந்திருப்பது கொஞ்சம் ஷாக்தான்.

    English summary
    Bengaluru man orders food in Swiggy and tries to deliver from Rajasthan Restaurant
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X