அசிங்கம்.. அரசு பஸ்சில் பெண் பயணி சீட்டில் "சிறுநீர் கழித்த போதை இளைஞர்.." கர்நாடகத்தில் அவலம்!
கர்நாடக மாநிலத்தில் அரசுப்பேருந்தில் பெண் பயணி இருக்கை மீது குடிபோதையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அரசுப்பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது, பெண் பயணி இருக்கை மீது குடிபோதையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து மங்களூருவிற்கு கர்நாடக அரசுப்பேருந்துக்கு சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது.
ஹூப்ளி மாவட்டம் கிரேசூரு தபா அருகே வந்த போது பேருந்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உணவு மற்றும் பிரேக் எடுப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி தபாவிற்கு சென்றுள்ளனர்.

பெண்ணிண் இருக்கையில் சிறுநீர்
அப்போது பேருந்தில் முழு போதையில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பெண் ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கையில் சிறு நீர் கழித்துள்ளார். உணவு சாப்பிடுவதற்காக அந்த பெண் கீழே இறங்கி சென்ற நேரத்தில் இளைஞர் அந்தப் பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். பின்னர் உணவு சாப்பிட்டுவிட்டு பேருந்துக்குள் வந்து தனது இருக்கையில் அமர வந்தப் இளம்பெண் தனது, இருக்கை அருகே சிறு நீர் கழிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் இருந்து இறக்கிவிட..
இதையடுத்து, பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் குடிபோதையில் சக பயணியின் இருக்கை மீது சிறு நீர் கழித்த இளைஞரிடம் கேட்ட போது, அந்த இளைஞர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து சக பயணிகளும் போதையில் இருந்த அந்த இளைஞரை பேருந்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்றும் அவரை தொடர்ந்து பேருந்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினர். தொடர்ந்து இளம் பெண்ணிற்கு மாற்று இருக்கை ஒதுக்கப்பட்டது. குடிபோதையில் தனது இருக்கை மீது சிறு நீர் கழித்த நபருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இளைஞர் மன்னிப்பு கேட்டுவிட்டதால்
இந்த சம்பவம் பற்றி கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேருந்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட பயணி குறித்த விவரத்தை பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பெற முயற்சித்தனர். இருந்தாலும் தனது செயலுக்கு அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் இளம்பெண்ணும் காவல்துறையில் புகார் அளிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு பேருந்து திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்டு சென்றது" என்று கூறப்பட்டது. பேருந்தில் சிறு நீர் கழித்ததாக கூறப்படும் அந்த இளைஞர் விஜயபுராவில் இருந்து மங்களுருவிற்கு சென்றுள்ளார். அந்த இளைஞர் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்றும் அருகில் இருந்த பயணி ஒருவர் கூறினார். இந்த சம்பவம் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி மீது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறு நீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிர்வாகம் கையாண்ட விதமும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. பெண் மீது சிறுநீர் கழித்தது தொடர்பாக ஷங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷங்கர் மிஸ்ராவிற்கு கடந்த மாதம்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications