Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் லாரி ஸ்டிரைக்.. கர்நாடகா, சென்னையில் எரிபொருள், காய்கறி தட்டுப்பாடுக்கு சான்ஸ்! மக்களே கவனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் திடீர் லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. இன்று லாரிகள் ஓட்டாமல் 6 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்து வருவதால் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாட்டில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்ட் சங்கங்களின் கூட்டமைப்பு (Fedration of Karnataka state lorry owners and agents association or FKSLOA) அறிவித்துள்ளது.

karnataka lorry strike

டீசல் விலையை குறைப்பது, டோல்கேட் கட்டண வசூலிப்பை நிறுத்துவது, எல்லைகளில் ஆர்டிஓ செக்போஸ்ட்டுகளை அகற்றுவது, பிட்னஸ் சர்ட்டிபிகேட் புதுப்பிப்பு கட்டணமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை மத்திய அரசு திரும்ப பெறுதல், பெங்களூருக்குள் எளிதாக லாரிகள் வந்து செல்ல வகை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி இந்த வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவில் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக கர்நாடகாவில் இன்று மட்டும் 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதற்கு மொத்தம் 129 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் டிரைவர்கள், ஏஜென்ட், லாரி உரிமையாளர்கள் என்று மொத்தம் 6 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் சுமார் 6 லட்சம் பேர் இன்று வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இதுதொடர்பாக சங்கம் சார்பில், ‛‛பால் சப்ளை செய்யும் லாரிகளை தவிர்த்து மற்ற அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதன்படி கட்டுமான பணிகளுக்கான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள், பெட்ரோல், டீசல், கியாஸ் டேங்கர்கள் உள்பட பிற அனைத்து பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு 24 மாநிலங்களில் உள்ள சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி ஆதரவு தெரிவித்த மாநிலங்களில் லாரிகள் கர்நாடகாவுக்குள் வராத நிலை உள்ளது''

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜிஆர் சண்முகப்பா கூறுகையில், ‛‛கர்நாடகா அரசு கடந்த 2 மாதத்தில் 2 முறை டீசல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது. டீசல் விலை உயர்வு என்பது கர்நாடகாவில் ஒவ்வொரு மக்களையும் பாதிக்கிறது. அதேபோல் கர்நாடகாவில் டோல்கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எல்லைகளில் ஆர்டிஓ செக்போஸ்ட்டுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடும் பாதிக்கப்பட உள்ளது. ஏனென்றால் காய்கறிகள், அரிசி, மருந்து உள்பட பல பொருட்களை கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு கொண்டு செல்லும் லாரிகள் இயங்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு கர்நாடகாவின் கோலார் உள்பட பிற இடங்களில் இருந்து சரக்குகள் தினமும் சென்று வருகின்றன. கோலாரில் இருந்து காய்கறிகள் குறிப்பாக தக்காளி சென்னைக்கு செல்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் சபர்வால் கூறுகைியல், ‛‛இந்தியாவின் எந்த பகுதியிலும் இருந்தும் லாரிகள் இன்று கர்நாடகாவுக்குள் நுழையாது. அதேபோல் கர்நாடகாவில் இருந்து லாரிகள் வெளிமாநிலங்களுக்கு செல்லாது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+