Ee Sala Cup Namde.. 18 ஆண்டாய் காத்திருப்பு இதுக்காகத்தான்! RCB ஜெர்சியுடன் டிகே சிவக்குமார் மெசேஜ்
பெங்களூர்: ‛‛கடைசி 18 ஆண்டுகளாக நாம் இந்த பெரிய நாளுக்காக காத்திருந்தோம். 18 ஆண்டுகளுக்கான மனஉறுதி, பேஷன், அர்ப்பணிப்புடன் நாம் காத்திருந்தோம். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளது. இது நமக்கான நேரம். நமக்கான கோப்பை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஆர்சிபி அணிக்கு ரஜத் பட்டிதாரும், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக உள்ளனர். ஐபிஎல் முதல் சீசன் கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை மொத்தம் 17 சீசன்கள் நடந்துள்ளன.
இது 18 வது சீசனாகும். தற்போது வரை பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளன. இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணி ரசிகர்கள் தங்களது அணி தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி உள்ளனர்.
அதேபோல் சினிமா நடிகர், நடிகைகள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் இருஅணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் பெங்களூர் அணிக்கு வீடியோ ஒன்றின் வாயிலாக சிறப்பு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். ஆர்சிபி டீசர்ட் அணிந்து டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக டிகே சிவக்குமார் பேசியுள்ள வீடியோவில், ‛‛அனைவருக்கும் நமஸ்காரம். கடைசி 18 ஆண்டுகளாக நாம் இந்த பெரிய நாளுக்காக காத்திருந்தோம். 18 ஆண்டுகளுக்கான மனஉறுதி, பேஷன், அர்ப்பணிப்புடன் நாம் காத்திருந்தோம். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளது. இது நமக்கான நேரம். நமக்கான கோப்பை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
இது வெறும் ஜெர்சி அல்ல. பல லட்சம் மக்களின் கனவு. கர்நாடகா உங்களோடு இருக்கிறது. கோடிக்கணக்க மக்கள் இந்த கோப்பைக்காக காத்திருக்கிறோம். தைரியமாக விளையாடி கோப்பையை கொண்டு வாருங்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறேன். கர்நாடகாவின் பல கோடி மக்கள் உங்களுடன் இருக்கிறோம். என்ஜாய் செய்து விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட்'' என்றார்.
Ee Sala Cup Namde! ♥️🏆
— DK Shivakumar (@DKShivakumar) June 3, 2025
18 years of grit.
Every prayer, every cheer, every heartbreak - it all leads to today.
This is more than a match.
Our moment. Our Cup.
Wishing @RCBTweets the very best - Karnataka is with you!#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/cTmRhjgjts
இந்த வீடியோவை டிகே சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‛‛இ சாலா கப் நம்தே. 18 ஆண்டு மனஉறுதி. ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு உற்சாகமும், ஒவ்வொரு மனவேதனையும் இதில் அடங்கும். இன்றையே பாட்டி இவை அனைத்தையும் உள்ளடக்கியது. இது வெறும் போட்டியை விட அதற்கும் மேலானது. இது நமக்கானது. நம்முடைய கோப்பைக்கானது. ஆர்சிபிக்கு வாழ்த்துகள். உங்களுடன் கர்நாடகா இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவை #PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 ஆகிய ஹேஷ்டேக்குகளில் பதிவிட்டுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications