Boy friend-யை கழற்றிவிடு.. மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று பேராசிரியர் செய்த செயல்.. அடச்சீ
பெங்களூர்: பெங்களூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் 20 வயது மாணவியை தனது வீட்டுக்கு ‛லஞ்ச்' விருந்துக்கு என்று ஏமாற்றி அழைத்து சென்றார். அப்போது அந்த மாணவியிடம் ‛பாய் ஃப்ரண்ட்டை' கழற்றிவிட்டுவிட்டு தனது வீட்டு அருகே உள்ள பிஜியில் தங்கும்படி வலியுறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். சஞ்சீவ் குமார் மண்டல். இவருக்கு வயது 45. பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருகிறார். இவர் பணி செய்யும் பல்கலைக்கழகத்தில் 20 வயது நிரம்பிய மாணவி ஒருவர் பிசிஏ படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சஞ்சீவ் குமார், அந்த மாணவியை தனது வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிடும்படி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் மாணவியின் தாயிடம் பேசி வீட்டுக்கு அழைத்து சென்றார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. பேராசிரியர் என்பதாலும், தாய் அனுமதி கொடுத்ததாலும் மாணவியை அவரது வீட்டுக்கு சென்றார். சஞ்சீவ் குமார் வீட்டில் அவரது மனைவி, குழந்தைகள் இருப்பார்கள் என்று மாணவி சென்றார். ஆனால் வீட்டில் அவர்கள் இல்லை. அவர் வசித்து வரும் அப்பார்ட்மென்ட் பார்க்கில் பைக்கை நிறுத்தியபோது தான் வீட்டில் யாரும் இல்லை என்பதை அவர் கூறினார். இதனால் மாணவி தயங்கி உள்ளார்.
இருப்பினும் பயப்பட வேண்டாம். பாதுகாப்பாக இருப்பாய் என்று நம்பிக்கை கொடுத்து மாணவியை வீட்டுக்குள் அழைத்து சென்றார் சஞ்சீவ் குமார். அதன்பிறகு சோபாவில் அமர வைத்து மாணவி குறித்த தனிப்பட்ட விஷயங்களை கேட்டுள்ளார். மேலும் ‛பாய் பிரண்ட்' பற்றிய கேள்விகளை எழுப்பிய அவர் அவருடன் ‛பிரேக்அப்' செய்யும்படி வலியுறுத்தி உள்ளார். அதோடு தனது வீட்டு அருகே உள்ள பிஜியில் தங்க வேண்டும். அப்படி தங்கினால் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து சந்தேகங்களை கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பணம், மதிப்பெண் மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு உதவுவதாக கூறினார். அதன்பிறகு தொடக்கூடாத இடங்களைதொட்டுள்ளார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் மாணவியின் செல்போன் ஒலித்தது. அப்போது செல்போனை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் மாணவி கேட்காமல் அவரது வீட்டில் இருப்பதாக கூறினார். அதன்பிறகு மாணவி அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
இதுபற்றி மாணவி சார்பில் திலக் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பேராசிரியர் சஞ்சீவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 75 (பாலியல் தொல்லை) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, ஸ்டேஷன் பெயிலில் விடுவித்தனர். இதுபற்றி, பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‛‛இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. மாணவி சார்பில் புகார் அளிக்கப்படவில்லை. போலீசார் நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்'' என்றார்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications