தமிழ்நாடு வழியாக.. பெங்களூர் - எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரயில் நாளை துவக்கம்.. ரூட் இதுதான்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து கேரளாவில் எர்ணாகுளத்துக்கு தமிழ்நாட்டின் கோவை வழியாக புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு நவம்பர் 11ம் தேதி முதல் இந்த ரயில் சேவை முறைப்படி இயங்க உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் - எர்ணாகுளம் வந்தே பாரத்தின் ரூட் மேப் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்ல உள்ளார். அங்கிருந்து புதிதாக 4 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

பனாரஸ் - கஜூராஹோ, லக்னோ - சஹரன்பூர், ஃபெரோஸ்பூர் - டெல்லி மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
எர்ணாகுளம் - பெங்களூர் வந்தே பாரத்
வாரணாசியில் இருந்து காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். எர்ணாகுளம் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தாலும் இருமார்க்கமாக ரயில் சேவை நவம்பர் 11ம் தேதியில் இருந்து தான் இயங்கும்.
புறப்படும் நேரம் என்ன?
அதன்படி கேஎஸ்ஆர் பெங்களூர் - எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 26651) அதிகாலை 5.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூர் வந்தே பாரத் ரயில் (26651) எர்ணாகுளத்தில் இருந்து தினமும் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரை சென்றடையும்.
எந்தெந்த நிலையங்களில் நிற்கும்?
இந்த ரயில் இருமார்க்கமாக மொத்தம் 7 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதன்படி
* கேரளாவின் திரிச்சூர்
* பாலக்காடு
* தமிழ்நாட்டின் கோவை
* திருப்பூர்
* ஈரோடு
* சேலம்
* பெங்களூரின் கேஆர் புரம் என 7 ரயில் நிலையங்களில் நின்று பெங்களூரை கிராந்தி வீரா சங்ககொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தை (பெங்களூர் சிட்டி) சென்றடையும்.
2 மணிநேரம் குறையும் நேரம்
தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் பயண நேரம் 11 மணிநேரமாக உள்ளது. ஆனால் இந்த புதிய வந்தே பாரத் ரயில் மூலமாக எர்ணாகுளம் - பெங்களூரு இடையேயான பயண நேரம் 8 மணிநேரம் 40 மணிநேரமாக இருக்கும். இதன்மூலம் 2.20 மணிநேரம் வரை பயண நேரம் குறைகிறது.
டிக்கெட் முன்பதிவு எப்போது?
இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. நாளை ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிறகு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அதுமட்டுமின்றி இது கேரளாவில் இருந்து பிற மாநிலத்துக்கு இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலாகும். அதோடு தென்மேற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் 12வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
இதுவரை இயக்கப்படும் 11 ரயில்கள் லிஸ்ட் இதோ..
| 1 | Chennai Central - Coimbatore
| 2 | Chennai Central - Madurai
| 3 | Chennai Central - Tirunelveli
| 4 | Chennai Central - Bengaluru
| 5 | Chennai Central - Visakhapatnam
| 6 | Chennai Central - Vijayawada
| 7 | Coimbatore - Bengaluru
| 8 | Thiruvananthapuram - Kasaragod
| 9 | Ernakulam - Bengaluru
| 10 | Nagercoil - Chennai
| 11 | Chennai - Tiruchirapalli












Click it and Unblock the Notifications