'3,000 ஆபாச வீடியோ' பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு- கூட்டாளியாக பாஜக மாஜி எம்எல்ஏ சேர்ப்பு!
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கிய 3,000 ஆபாச வீடியோக்களை எடுத்த முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான இந்த புதிய வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ப்ரீத்தம் கவுடா உட்பட 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்த வழக்கை கர்நாடகா சிஐடி போலீசார் விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் கொடுத்த பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். பிரஜ்வல் தாயார் பவானியும் இந்த வழக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுத்தடுத்து புகார்கள் குவிவதால் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டும் வருகிறார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா, இளம் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஆபாசப்படம் எடுத்ததாக புதியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது இது 5-வது வழக்கு.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான இந்தப் புதிய வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ப்ரீத்தம் கவுடா உட்பட 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வழக்கில் 4 பேர் மீதும் 355ஏ - பாலியல் தொல்லை கொடுத்தல்; 345பி ஆடைகளை கழற்ற அச்சுறுத்துதல், 66இ அந்தரங்க வீடியோ எடுத்தல் என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ப்ரீத்தம் கவுடாவை விசாரணைக்கு அழைக்க சிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்., ஆனால் ப்ரீத்தம் கவுடாவோ, என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆகையால் கருத்து தெரிவிக்க முடியாது என்றார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வும் 3,000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிக்கியிருப்பது கர்நாடகாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா சில நாட்களுக்கு முன்னர் ஓரினச் சேர்க்கை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications