பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட முன்னாள் கார் டிரைவர் மாயம்.. மலேசியாவுக்கு ஓட்டம்?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட அவருடைய முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். அதாவது மூத்த மகன் ரேவண்ணாவின் மகன், மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மூத்த சகோதரர்தான் ரேவண்ணா.

கடந்த முறை நடந்த கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஜேடிஎஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.
இதற்கு காரணமே பாஜகதான் என ஜேடிஎஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில் கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைத்துள்ளது. அந்த மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக ஹாசன் தொகுதிக்கு வாக்குப் பதிவு முடிந்துவிட்டது.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப்களில் பரவியது. ரேவண்ணாவிடம் உதவி கேட்டு வரும் பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து அதை பென் டிரைவில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வீடியோதான் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரஜ்வலோ, அவை எல்லாம் மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என மறுப்பு தெரிவிக்கிறார். இந்த வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ வெளியான நிலையில் பிரஜ்வலை அவருடை சித்தப்பா குமாரசாமி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் பிரஜ்வலிடம் கார் ஓட்டுநராக இருந்த கார்த்திக் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் "தேவகவுடா குடும்பத்திற்கு கார் ஓட்டுநராக இருந்தேன். என்னுடைய நிலத்தை அவர்கள் அபகரித்துவிட்டார்கள். எனது மனைவியையும் துன்புறுத்தினார்கள். இதைத் தொடர்ந்துதான் நான் பாஜகவை சேர்ந்த தேவராஜ கவுடாவை சந்தித்தேன்.
அவர்தான் எனக்கு நியாயம் கிடைக்க ஊடகத்திடம் பேசுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து தேவராஜ கவுடாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரஜ்வலின் பாலியல் சீண்டல்கள் அடங்கிய பென் டிரைவை அவரிடம் கொடுத்தேன். அவர் எவ்வாறு அதை பயன்படுத்தினார் என தெரியவில்லை. அவர் அந்த பென் டிரைவை வேறு யாரிடமாவது கொடுத்தனரா என தெரியவில்லை. ஆனால் காங்கிரஸிடம் நான் பென் டிரைவை கொடுக்கவே இல்லை. பாஜகவும் ஜேடிஎஸ்ஸும் கூட்டணியில் இருக்கும் போது அந்த வீடியோக்களை தேவராஜ கவுடா வெளியிட்டால் அது கூட்டணிக்கு எதிராகத்தான் முடியும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த டிரைவர் கார்த்திக்கை காணவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சிவக்குமார் மற்றும் அவருடைய சகோதரர் உள்ளிட்டோர் டிரைவர் கார்த்திக்கை மலேசியாவுக்கு அனுப்பிவிட்டதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பென் டிரைவ் குறித்து டிரைவர் கார்த்திக் வீடியோ வெளியானது. ஆனால் கார்த்திக்கை காணவில்லை. அவர் எங்கே, எங்கிருந்து அந்த வீடியோ வாக்குமூலத்தை அவர் அளித்தார். அவசர அவசரமாக அந்த வீடியோ எடுக்கப்பட்டு செய்தி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது ஏன். கார்த்திக் மலேசியாவில் இருக்கிறார். அவரை அங்கு அனுப்பியது யார். அங்கிருந்து வீடியோ அனுப்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications