அதிகாலையில் டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற பிரபல ஜோதிடர்.. முதல்வர் யோகம்? நல்ல நேரம் பற்றி கணிப்பு
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைமை கர்நாடகா முதல்வர் யார் என இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முதல்வர் ரேஸில் இருக்கும் டி.கே.சிவகுமாரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை பிரபல ஜோதிடர் விஜய்ராஜ் குருஜி வந்து டிகே சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம், பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது கர்நாடகா காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்த தீர்மான அறிக்கையின் அடிப்படையில் யார் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது. இன்று மாலைக்குள் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மேலிடம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் டெல்லி சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. முன்னதாக சித்தராமையா டெல்லி சென்றிருந்த நிலையில் டி.கே.சிவகுமாரும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.15 மணியளவில் அவரது வீட்டுக்கு பிரபல ஜோதிடரான விஜயராஜ் குருஜி வந்தார். அவரிடம் டி.கே.சிவக்குமார் ஆசிபெற்றார். விஜயராஜ் குருஜி எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பதில் நிபுணர் என்று கூறப்படுகிறது.
டிகே சிவகுமாரை சந்தித்த ஜோதிட நிபுணர் விஜயராஜ் குருஜி, டிகே சிவக்குமாரிடம் பேசியது பற்றி கன்னட ஊடகங்களில் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, புதன் மற்றும் ஆதித்ய பஞ்சமயோகம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் வியாழக்கிழமை நல்ல நாள். அன்றே நல்ல வேலையை தொடங்குங்கள் என்று ஜோதிடர் விஜயராஜ் குருஜி டிகே சிவகுமாரிடம் கூறியுள்ளாராம்.

பின்னர் டிகே சிவக்குமார் வீட்டில் இருந்து விஜயராஜ் குருஜி புறப்பட்டுச் சென்றார். நல்ல வேலை என ஜோதிடர் கூறியது முதலமைச்சர் பதவியைத் தான் என்கிறார்கள். டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் முதலமைச்சர் பதவி வழங்கினால், அவர் வியாழக்கிழமை முதலமைச்சராகப் பதவி ஏற்பார் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. எனினும், இது நடக்குமா என்பதை காங்கிரஸ் தலைமையின் இன்றைய முடிவு தெளிவுபடுத்தும்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!











Click it and Unblock the Notifications