பெங்களூர் ரயில் நிலையத்தை சூழ்ந்த புகை.. அலறி ஓடிய மக்கள்! ரயில் பெட்டியில் தீ பிடித்ததால் பதற்றம்
பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து தினமும் காலை 8.10 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணியளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும். நேற்றிரவும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்பட்டு 33 நிறுத்தங்கள், 1,136 கி.மீ தூரத்தை கடந்து 21 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பின்னர் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

பெங்களூர் வந்து நின்ற பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து பி1 மற்றும் பி2 பெட்டிகளிலிருந்து புகை வெளியேறியிருக்கிறது. சந்தேகமடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அதற்குள் புகை நெருப்பாக எரிந்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரயில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து இரண்டு மணி நேரம் கழித்துதான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதால் பயணிகள் யாரும் இதில் காயமடையவில்லை. அதேபோல முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெங்களூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications