ஜாலிக்கு அழைத்த மீன் வியாபாரி... கண்டந்துண்டமாக வெட்டி ஜோலியை முடித்த பெண் குடும்பம்
பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மீன் வியாபாரியை அந்த பெண்ணின் குடும்பத்தினர் வெட்டிக்கொலை செய்துள்ளனர். பெங்களூருவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர்: ஜாலியாக இருக்கலாம் வா என்று முன்னாள் நண்பரான மீன் வியாபாரி அடிக்கடி உறவுக்கு அழைத்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கொந்தளித்து குடும்பமே சேர்ந்து அந்த மீன் வியாபாரியை கண்டம் துண்டமாக வெட்டி ஜோலியை முடித்துள்ளனர்.
பெங்களூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இது. டிஜி ஹள்ளி ரோஷன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜரார். 38 வயதாகிறது. இவரது குடும்பமும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் குடும்பமும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

சமீபத்தில் ஏதோ பிரச்சினை காரணமாக பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டனர். இந்த நிலையில் ஜரார், அந்தப் பெண் தனது கடைப் பக்கம் வரும் போதும் போகும்போதும் பேச்சுக் கொடுத்துள்ளார். ஜாலியாக இருக்கலாம் வா என்று கூப்பிட்டு வந்தார். ஆனால் அப்பெண் அதை நிராகரித்து சண்டை போட்டு விட்டு வருவாராம்.
இப்படியே இது சில நாட்களாக தொடர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஜரார் ஏதோ சொல்லப் போக அந்தப் பெண் கோபத்துடன் பதில் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். கோபமடைந்த ஜரார் நன்றாக குடித்து விட்டு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகாத முறையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண் தனது கணவருக்கும், சகோதரர்களுக்கும் போனைப் போட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4. 30 மணி இருக்கும். ஜரார் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் கணவர் ரிஸ்வான், சகோதரர்கள் முகம்மது இஷாக், முகம்மது கெளஸ், சாதிக், உறவினர்கள் சையத் அகமது, சல்மான் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக ஜராரை வெட்டிக் கொன்றனர். உடல் முழுவதும் விழுந்த வெட்டுக்களால் ஜரார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் பரவியதும் போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றினர். தீவிர தேடுதல் வேட்டையில் கொலையாளிகள் அனைவரும் சிக்கினர். குடும்பமே சேர்ந்து மீன் வியாபாரியைக் கொன்று குவித்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications