முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப் காலமானார்... கர்நாடகத்தில் இன்னொரு சோகம்!
பெங்களூரு: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜாபர் ஷெரீப் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஜாபர் ஷெரீப்பின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு சோகமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
'India Wins Freedom' என்ற புத்தகத்தின் உருது மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை நவம்பர் 28 ம் தேதி, வெளியிடுவதில் ஜாபர் ஷெரீப் தீவிரமாக இருந்தார். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜாபர் ஷெரீப் உயிரிழந்தது. அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி கட்சி தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
1991- 95 ஆண்டுகளில் ரயில்வே துறை அமைச்சராக ஜாபர் ஷெரீப் இருந்த போது, ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுதான் கர்நாடகத்தின் பிரபல நடிகர் அம்பரீஷ் மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று ஜாபர் ஷெரீப் மரணமடைந்துள்ளது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications