Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகையின் "கன்னத்தை" கிள்ளி, அதுவும் ஓபனா.. யார் பாருங்க? அதைவிடுங்க, தாமரையை சாய்க்குமா கர்நாடக காங்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நீயா? நானா? என்று உச்சக்கட்ட மோதல் கர்நாடக தேர்தலில் எதிரொலித்து கொண்டிருக்கிறது.. பாஜகவுக்கும் சரி, காங்கிரசுக்கும் சரி, வாழ்வா? சாவா? என்பதுபோலவே கர்நாடக தேர்தல் அமைய போகிறது.

தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டும்தான் பாஜக காலை பதித்துள்ளது.. அதுவே இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.. நடந்து முடிந்த கருத்து கணிப்புகளை எடுத்துக்கொண்டால், சொல்லிக்கொள்ளும்படியான ரிசல்ட்டுகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தநிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்ப‌தாக கணிப்புகள் வெளிவந்திருந்தது, பாஜகவை அதிர வைத்தது..

Great Strategies by karnataka Congress and BS yeddyurappa pinched actress shikaripuras cheek

டெண்டர்கள்: இத்தனைக்கும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, கர்நாடகத்திற்கு 8 முறை பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, பாஜகவுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது..

அதனால், காங்கிரஸ் இந்த முறை கர்நாடகத்தை விடுவதாக இல்லை.. ராகுல்காந்தியின் நடைபயணம் பெருத்த பலத்தை நாடுமுழுவதும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கர்நாடகத்தில் சற்று அதிகமாகவே எதிரொலித்துவருகிறது.. போதாக்குறைக்கு எம்பி பதவியை பறிக்கவும், சூடாகிவிட்ட கதர் தொண்டர்கள், பாஜகவை வீழ்த்த ஒன்றுதிரண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், கர்நாடக காங்கிரஸ் உத்வேகம் கொண்டு எழுந்துள்ளது.. அதனால்தான், பாஜகவையும் தாண்டி, காங்கிரஸின் எழுச்சி கர்நாடகத்தில் பலமாக பேசப்பட்டு வருகிறது..

Great Strategies by karnataka Congress and BS yeddyurappa pinched actress shikaripuras cheek

லிங்காயத்து ஓட்டுக்கள்: போதாக்குறைக்கு எடியூரப்பா, பொம்மை ஆகியோரின் மோதலும், ஊழலும், காங்கிரசுக்கு வலுவாகி கொண்டிருக்கிறது.. அத்துடன், லிங்காயத்து சமூகத்தினரின் ஓட்டுக்களையும், இஸ்லாமியர்களின் வாக்குகளையும் பிரதானமாக நம்பி உள்ளது. ஆனால், முஸ்லிம் வாக்குளை குமாரசாமி எந்த அளவுக்கு பிரிப்பார் என்பதையும் கணக்குபோட வேண்டி உள்ளது.. ஆக, காங்கிரசுக்கு ஒருபக்கம் பாஜக என்றால், மறுபக்கம் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் மல்லுக்கட்டி நிற்கிறது.. இந்த 2 தரப்பையும் காங்கிரஸ் சமாளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது..

கிட்டத்தட்ட இந்த 2 தரப்புமே ஒன்றுதான் என்றாலும், எந்த சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு பிரிய போகிறது என்பதை வைத்துதான் வெற்றி தோல்வி இங்கு நிர்ணயிக்கப்பட உள்ளது.. பாஜகவை பொறுத்தவரை வடமாநிலங்களில்கூட, இப்படி முட்டி மோதி பிரச்சாரத்தை நடத்தியதில்லை.. அந்த அளவுக்கு கர்நாடக காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுக்கு கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது.. இதற்காகவே, லிங்காயத்துகளின் இடஒதுக்கீட்டை 5-லிருந்து 7 சதவீதமாக உயர்த்த பாஜக பிளானை போட்டுள்ளது.

லிங்காயத்துகளை தங்கள் பக்கம் இழுத்துவிட்டால் போதும், ஓரளவு சரிக்கட்டிவிடலாம் என்று நினைக்கிறது.. ஒருவேளை, "தொங்கு சட்டசபை" அமைந்துவிட்டால், லட்டுபோல தங்களுக்கு சான்ஸ் கிடைத்துவிடும், ஆட்களை இழுத்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என்று பாஜக நம்பி கொண்டிருக்கிறது.. இப்படி பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளுமே கர்நாடகத்தை பிரச்சாரங்களால் ரவுண்டு கட்டிவருகிறார்கள்.. இதனிடையே, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீடியோ வெளியாகி உள்ளது..

Great Strategies by karnataka Congress and BS yeddyurappa pinched actress shikaripuras cheek

எடியூரப்பா : அதாவது, எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்... அதனால், விஜயேந்திரா நேற்று ஷிகாரிபுரா தொகுதிக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றிருந்தார்.. அப்போது அவருடன் எடியூரப்பாவும், பாஜக ஆதரவாளரான நடிகை சுருதியும் சென்றிருந்தனர். அப்போது எடியூரப்பா நடிகை சுருதியின் கன்னத்தைக் கிள்ளியும், தோளில் தட்டியும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.. பொதுஇடத்தில் கன்னத்தை கிள்ளிய எடியூரப்பாவின் இந்த வீடியோவை, சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அது இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+