காதலிக்கு ரூ.3 கோடியில் சொகுசு வீடு.. நடிகைகளுடன் உல்லாசம்.. பெங்களூரை அதிர வைத்த குஜராத் திருடன்
பெங்களூர்: பெங்களூர் மடிவாலாவை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டிற்குள் கடந்த ஜனவரி 9-ந் தேதி மர்ம நபர்கள் புகுந்தனர். அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தேடுதல் வேட்டையில்
பெங்களூரில் 180 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குஜராத் இளைஞர் சிக்கினார். அவர் தனது காதலிக்கு ரூ.3 கோடியில் சொகுசு வீடு கட்டிக் கொடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. விவரமாக பார்ப்போம்.
பெங்களூர் மடிவாலாவில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் வீட்டில் கடந்த ஜனவரி 9-ந் தேதி மிகப்பெரிய கொள்ளை நடந்தது. அவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து மர்மநபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்கள் கோரமங்களா வெங்கடரெட்டி லே-அவுட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் குஜராத் மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வார்பேட்டையை சேர்ந்த பஞ்சாரி சுவாமி (வயது 37) என்பவரை கைது செய்தனர். மற்றவர்கள் போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பஞ்சாரி சுவாமியை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்த போது, திருமணமான இவருக்கு ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. சொகுசு வாழ்க்கை வாழ விரும்பிய பஞ்சாரி சுவாமி கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறாராம். இவர் மேலும் சிலருடன் சேர்ந்து கைவரிசை காட்டி வந்தாராம். கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் மது அருந்துவது. சில திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது என்று சொகுசாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் 2016-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பெண் ஒருவருடன் பஞ்சாரி சுவாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தாராம் பஞ்சாரி. அந்த பெண்ணுக்கு ரூ.3 கோடியில் சொகுசு வீடு கட்டி கொடுத்தார். மேலும் அந்த பெண்ணின் பிறந்த நாளுக்கு ரூ.22 லட்சத்தில் பரிசும் வழங்கினாராம்.
இந்நிலையில் 2016-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதான அவர், குஜராத் சிறையில் 6 ஆண்டுகள் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். அதன்பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று அங்கு திருடி வந்தார். 2024-ம் ஆண்டு அம்மாநில போலீசார் பஞ்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து கடந்த மாதம் (ஜனவரி) 9ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.
பின்னர் கூட்டாளிகளுடன் பெங்களூர் வந்த அவர், இங்கு பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தார். இந்த நிலையில் அவர் போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 181 கிராம் தங்க நகைகள், 334 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். கைதான பஞ்சாாி சுவாமி மீது குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் 180 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. அவரிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications