ஓடும் ரயிலில் சமைத்து சாப்பிட்ட குஜராத்தி குடும்பம்.. பயணிகள் பகிர்ந்த கசப்பான அனுபவம்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நீங்கள் ரயில்களில் பயணிக்கும் போது, மின்சார டோஸ்டர், ஹீட்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி உணவு சமைப்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி சமைப்பது சட்டப்படி தவறு. அதேபோல் அதானல் மிகப்பெரிய தீ விபத்து அபாயம் ஏற்படும் என்பதால், சமைப்பதும் பெரிய சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. குஜராத்தில் சூரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மின்சார டோஸ்டரில் சமைத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக தங்களது பழைய கசப்பான அனுபவங்களை பயணிகள் பகிர்ந்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், தாங்கள் ரயிலின் 3 ஏசி பெட்டியில் பயணம் செய்வதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். ரயிலின் நடு படுக்கையில் அவர்கள் உணவு சமைத்துள்ளார்கள். அந்தப் பெண், "சாண்ட்விச் தயாரிப்பதற்காக தங்களுடன் மின்சார டோஸ்டரைக் கூடவே கொண்டு வந்திருந்தார். இந்த வீடியோ ரயில் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

train Gujarat Surat

இதேபோன்று சில பயணிகள் ரயில்களில் சமைத்துள்ள சம்பவங்களை நேரில் பார்த்த பயணிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். ஒரு பயணி வெளியிட்ட பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொல்கத்தாவில் இருந்து புனேவுக்கு தனியாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு மிடில் பர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் அதுவே எனது இருக்கையாகவும் இருந்தது.

எனக்கு அருகில் ஐந்து பேர் கொண்ட ஒரு குஜராத்தி குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்களுக்கு ஐந்து இருக்கைகள் இருந்தன. இரவு சுமார் 10 மணியளவில் அவர்கள் அதிக சத்தம் போடத் தொடங்கினர். இரவு உணவு சாப்பிடவும் தயாரானார்கள். அப்போது என்னிடம் வந்து, நான் மேல் படுக்கைக்குச் சென்று தூங்கும்படி கேட்டுக்கொண்டனர். முதலில் நான் சிறிது தயக்கம் காட்டினேன். ஆனால் எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று நினைத்து அவர்களுக்காக மேல் படுக்கைக்குச் சென்றுவிட்டேன்.

அவர்கள் மிகவும் சத்தமாகப் பேசிக்கொண்டும், உணவு சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர். உணவுப் பொட்டலங்கள், குப்பைகள் என அந்த இடமே அலங்கோலமாகக் கிடந்தது. பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமான, அப்பாவியான குடும்பத்தைப் போலத்தான் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகளில் கொஞ்சம்கூட நாகரிகம் இல்லை.

சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் என்னை கீழே வரச் சொன்னார்கள். நான் எனது நடு படுக்கைக்குத் திரும்பியபோது அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் சாப்பிட்ட உணவின் துகள்கள், ரொட்டித் துண்டுகள், பாக்கெட்டுகள், குப்பைகள் என எனது படுக்கை முழுவதும் அழுக்காகக் கிடந்தது. அவர்கள் அதைச் சுத்தம் செய்யக்கூட முயற்சிக்கவில்லை.

எந்தப் பிரச்சினையையும் உருவாக்க விரும்பாமல், புனேவைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அந்த அழுக்கான படுக்கையிலேயே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது ரயில் பயணங்களிலேயே மிகவும் மோசமான அனுபவங்களில் இதுவும் ஒன்று. மக்கள் எப்போது பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய நாகரிகத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள்? பயணத்தின்போது மற்றவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?

இப்படிப்பட்டவர்களின் செயல்களால்தான் வெளிநாடுகளிலும் மற்ற இடங்களிலும் இந்தியர்களைச் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அதன் பாதிப்பை எந்தத் தவறும் செய்யாத எங்களைப் போன்ற மற்றவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இன்னொரு பயணி வெளியிட்ட வீடியோவில், "தயவுசெய்து பொதுப் போக்குவரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்திருந்தாலும் இதைச் செய்யக்கூடாது.

வீட்டிலிருந்தே உணவைத் தயாரித்துப் பொட்டலமாக எடுத்துச் செல்லுங்கள். ரயிலில் பயணம் செய்யும்போது அதைச் சாப்பிட்டு மகிழுங்கள். அதை விடுத்து, ரயிலுக்குள்ளேயே முழுமையான சமையலறையைத் தொடங்கிவிடாதீர்கள்.

இது எனது சீன ரயில் பயணத்தை நினைவுபடுத்துகிறது. அங்கு பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் உணவு வகைகளைப் பார்த்தால் இந்தியப் பயணிகளே வெட்கப்படும் அளவுக்கு இருக்கும். ஆனால், அனைத்தையும் முறையான பொது இட நாகரிகத்துடன் செய்கிறார்கள்.

நான் வசதியாக இருக்கிறேனா என்று கேட்டுவிட்டுத்தான் சிலர் எனக்கு அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள். மேலும், ரயில் பயணத்துக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, அதிக வாசனை வீசாத உணவுகளை எடுத்துவந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

அவர்கள் பயணிக்கும் பெட்டியையோ இருக்கைகளையோ அழுக்காக்கவில்லை. தங்களுடன் கொண்டுவந்த குப்பைப் பைகளில் அனைத்து குப்பைகளையும் சேகரித்து, ரயிலில் இருந்து இறங்கும்போது அவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+