பெங்களூரில் ஜிம் ட்ரெய்னர் சக நண்பர்களால் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வாடிக்கையாளரின் குடியிருப்பு வளாகத்திற்குள் ஏற்பட்ட தகராறில், 25 வயதான ஜிம் ட்ரெய்னர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படும் தகவல்களை பார்ப்போம்.

பெங்களூரூ யலஹங்காவில் உள்ள ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் நந்தன். இவருக்கு 25 வயது ஆகிறது. நந்தன் சஹாகரா நகரில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை ஜிம்மில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நந்தன் பங்கேற்றுள்ளார். பின்னர் தனது சக ட்ரெய்னர்களான விஸ்வநாத், சரத் மற்றும் நிஷாந்த் ஆகியோருடன் சேர்ந்து, தங்களின் வாடிக்கையாளரான அனுஷ் என்பவரது வீட்டிற்குச் சென்று இரவு தங்கி உள்ளனர். அந்த வீடு ஹெப்பால் அருகே உள்ள கெம்பாபுராவில் அமைந்துள்ளது.

Gym trainer beaten to death by friends in Bengaluru

அனுஷின் தனிப்பட்ட ஜிம் பயிற்சியாளராக விஸ்வநாத் பணியாற்றி வந்துள்ளார். அந்த அடிப்படையில் தான் நந்தன் உள்பட மூன்று பேரும் சனிக்கிழமை இரவு தங்கி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் அவர்களுக்கிடையே தனிப்பட்ட விவகாரம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களால் நந்தன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த நந்தன், ஹெப்பாலைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த மோதலில் குற்றம் சாட்டப்பட்ட விஸ்வநாத் மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக அமிர்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் (விஸ்வநாத், சரத், நிஷாந்த் மற்றும் அனுஷ்) காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு வடகிழக்கு மண்டலக் காவல் துணை ஆணையர் மிதுன் குமார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இது தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலை என்பது தெரியவந்துள்ளது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகள் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்து கொலையின் பின்னணியைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+