ரபேல் ஒப்பந்தம்.. ராகுல் அப்படி சொல்கிறார்... இந்த மாதவன் இப்படி சொல்கிறாரே.. என்னதான் நடக்கிறது?
பெங்களூர்: ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தின் நிதி நிலை வலுவான நிலையில் உள்ளது என அந்த நிறுவனத்தின் தலைவர் மாதவன் தெரிவித்தார்.
ரபேல் ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு தராமல் அம்பானி நிறுவனத்திற்கு மோடி கையெழுத்திட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையே நாடாளுமன்றத்திலும் விவாதத்தின் போது எழுப்பினார்.
மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாததால் அவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை உள்ளதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும் அவர்களது நிதி நிலையும் மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஹிந்துஸ்தான்
இது மட்டுமல்லாமல் ரபேல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து ஏரோ ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவர் மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மும்முரம்
அவர் கூறுகையில் ரபேல் விமான ஒப்பந்தத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ரபேல் விமான விவகாரத்தில் நிறுவனம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் பாட்டுக்கு எங்கள் பணியில் மும்முரமாக இருந்தோம்.

நேரடி கொள்முதல்
ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தின் நிதி நிலை வலுவான நிலையில் உள்ளது. ரபேல் விமானம் நேரடி கொள்முதல் என்பதால் அதன் ஆப்செட் தயாரிப்பில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. அது போல் எங்கள் நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகளும் வேறு நிறுவனத்துக்கு செல்லவில்லை.

ஹெச்ஏஎல்
அரசியல் சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறோம் என்றார் மாதவன். ரபேல் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்க ஒப்பந்தம் கொடுத்ததால் உள்நாட்டு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில் மாதவன் பேட்டி அளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications