இது பீட்சா டார்ச்சர்.. இளம் பெண்ணுக்கு காதலன் தந்த புது தொல்லை..!
பெங்களூரு: பெங்களூருவில் ஒரு தலையாக காதலித்த இளைஞன், திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு எலகங்கா நியூ டவுனில் 36 வயது பெண் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர், ராணி பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களுக்கு காதல் தொல்லை கொடத்து மெசேஜ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

பீட்சா உடன் ஊழியர்
இறுதியாக உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி இருக்கிறார். ஆனால் ராணி திருமணத்திற்கு மறுத்து விட்டார்.இந்த நிலையில் ராணி தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு பீட்சா எடுத்து கொண்டு ஊழியர் ஒருவர் வந்திருக்கிறார்

ஆர்டர்
ஆனால் அந்த பெண், தான் பீட்சா ஆர்டர் செய்யவே இல்லை என்று மறுத்திருககிறார். ஆனால் இந்த பெண்ணின் பெயரில் தான் பீட்சா ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த பெண் பணம் கொடுத்து பீட்சாவை பெற்று கொண்டார்.

தொல்லை
ஆனால் ராணியின் வீட்டிற்கும், அவர் பணியாற்றி வரும் அலுவலகத்திற்கும் தொடர்ந்து பெண்ணின் பெயரில் பீட்சா வந்தது. யார் அனுப்பி இருப்பார்கள் என்று குழம்பி போய் இருந்தார். இந்த நிலையில் ராணியின் சமூக வலைத்தளங்களுக்கு குறுந்தகவல் அனுப்பிய மர்மநபர், நான் தான் உங்கள் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறேன். நீங்கள் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து உங்கள் பெயரில் பீட்சாவை ஆர்டர் செய்து தொல்லை கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

போலீஸ்
அத்துடன் ராணி செல்லும் இடங்களில் எல்லாம் அவரை கண்காணிக்க தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களை நியமித்து உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனால் பயந்து போன ராணி, அந்த மர்மநபர் மீது எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரின் பேரில் போலீசார் மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications