பிக்பாஸ் பேக்கை மாட்டிக்கொண்டு போன கமல்ஹாசன்.. கண்டுக்கவில்லையே டிகே சிவகுமார்.. என்னாச்சு?
பெங்களூர்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அணிந்திருப்பதை போன்ற ஒரு பையுடன் கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வந்திருந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அவர் எம்எல்ஏவாக பதவி வகித்து வந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டிருந்தார். டெல்லியில் அவருடைய வீட்டிற்கு சென்று சோனியா காந்தியையும் சந்தித்திருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருகிறோம் என்றும் அறிவித்தார். இதையடுத்து இதே நிலை 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அவரை போல் பிற தலைவர்களும் பிரச்சாரம் செய்த நிலையில் மகத்தான வெற்றியை ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றார். இந்த நிலையில் கர்நாடகா தேர்தலிலும் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து சித்தராமையா கர்நாடகா முதல்வர் என அறிவிக்கப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா இன்றைய தினம் நடந்தது. பெங்களூர் கான்டீரவா மைதானத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் இன்று பெங்களூர் சென்றார்.
கான்டீரவா மைதானத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் முக்கால் கை கொண்ட டீசர்ட் அணிந்திருந்தார். தோளின் குறுக்கே ஒரு பையை மாட்டியிருந்தார். திடீரென கமல்ஹாசனை பார்ப்பதற்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாரா இல்லை பதவியேறபு விழாவிற்கு வந்திருக்கிறாரா என தெரியாத அளவுக்கு அவரது பை இருந்தது.
வழக்கமாக பிக்பாஸ் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த வீட்டை கமல்ஹாசன் காண்பிப்பார். அப்போது பேசுவதற்கு தோளின் குறுக்கை மாட்டப்பட்ட பையில் மைக் இருக்கும்.அதை அணிந்தபடியே வீட்டுக்குள் செல்லும் கமல்ஹாசன் வீட்டை விவரிப்பார். போட்டியாளர்களும் அந்த மைக் பையை குளிக்கும்போது பாத்ரூம் செல்லும் போதும் தூங்கும் போதும் மட்டும்தான் கழற்றி வைக்க வேண்டும். மற்ற நேரங்களில் அணிந்திருக்க வேண்டும்.
அது போல் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பே கமல்ஹாசன் விழா மேடைக்கு சென்றுவிட்டார். அவருக்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கைகொடுத்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசனை கண்டுகொள்ளவே இல்லை. அது போல் துணை முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவக்குமார் கூட வரிசையில் அமர்ந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி கைகொடுத்தார். ஆனால் கமல்ஹாசன் எழுந்து நின்ற போது சட்டென டி.கே.சிவக்குமார் சென்றுவிட்டார். இது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு வேதனை தருவதாக அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications