மஞ்சள் அலர்ட்.. பெங்களூரில் செப்டம்பர் 9 வரை மழை வெளுக்க போகிறது.. அதிகரிக்கும் வெள்ளம்.. நிலை என்ன?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செப்டம்பர் 9ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. பெங்களூரில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. உத்தர கர்நாடகா, தக்சின் கர்நாடகாவிற்கு இன்று தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்.
இதில் பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்த வருடம் இயல்பை விட 162 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.

பெங்களூர்
கடந்த ஜூன் 1ம் தேதி அங்கு பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை இதுவரை 162 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது. இன்னும் 1 வாரத்திற்கு மழை பெய்யும் என்பதால் இந்த சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை
இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதிதான். அதேபோல் பெல்லந்தூரில் இருக்கும் RMZ Ecospace பகுதி, அதை ஒட்டிய சாலை முழுக்க தண்ணீர் தேங்கியது. மகாதேவபரா, மாரத்தஹள்ளி பகுதிகளிலும் இதனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. எச்எஸ்ஆர் சாலை பகுதிகளிலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம்
வெள்ளத்தைவிட சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள், சேதங்கள்தான் மக்களை அதிகம் அச்சுறுத்தி வருகிறது. சாலைகளில் இருக்கும் குழிகள் காரணமாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் குழிகளுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் பல இடங்களில் வாகனங்கள் மிதந்து செல்லும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

வானிலை
பெங்களூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் அந்த ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மழை வெள்ளத்தால் அங்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஏற்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என்று ஐடி ஊழியர்கள் பலர் டிராக்டர் பின்னால் அமர்ந்து அலுவலகம் சென்று கொண்டு இருக்கின்றனர். தண்ணீரில் டிராக்டர் மட்டுமே பாதிப்பு இன்றி செல்லும் என்பதால் இப்படி பயணம் மேற்கொள்கின்றனர்
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications